இச்சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், பாராளுமன்ற
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
மேலும், டெல்லியில் மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் 144 தடை உத்தரவு
போடப்பட்டுள்ளது. இன்று இரவு முன்னெச்சரிக்கை காரணமாக டெல்லி கேட் அருகே
பொதுமக்கள், போராட்டக்காரர்கள் ஒன்று கூடாத வண்ணம் 144 தடை உத்தரவு
போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
சிறுமியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார். அவர்,
சிறுமி சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று சிகிக்சை அளிக்கும் டாக்டரிடம் சிகிச்சை
குறித்து கேட்டறிந்தார். மேலும், அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் பேசினார்.
tamilcnn thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக