பேங்குனா, ஏப். 16-
பசிபிக் பெருங்கடலின் 'ரிங் ஆப் பையர்' என்றழைக்கப்படும் பூகம்ப பகுதியில் உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.6 ஆகப்பதிவானது.
பௌகன்வில்லே தீவுப்பகுதியில் இருந்து 125 கிலோ மீட்டர் தென்மேற்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக கூறப்படுகிறது.
'ரிங் ஆப் பையர்' பகுதியில் உள்ள டெக்டோனிக் பாறைதட்டுகளில் ஏற்படும் உராய்வின் காரணமாக வறுமை நாடான இந்த பப்புவா நியூகினியா இது போன்று பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது.
1998-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து சுனாமி தாக்கியதில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று ரிக்டர் அளவில் 7.8 அளவிலான கடுமையான பூகம்பம் ஈரானை தாக்கியது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக