பரமக்குடி: மதுரை-ராமேஸ்வரம் அரசு பஸ்சில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த சிவகங்கை இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ்சில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த குமரமுத்து மகன் ஆனந்த் (20) என்பவர், செல்போனில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பரமக்குடி பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த அனைத்து பஸ்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஒரு பஸ்சில் வந்த வாலிபரின் பையை சோதனையிட்டதில், பாலித்தீன் பையில் சுற்றி துணிகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கேட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ஸீ50 லட்சம். விசாரணை யில், சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையைச் சேர்ந்த காசிநாதன் மகன் யோகேஷ்குமார் (27) என தெரிய வந்தது. சென்னையில் பி.இ படித்த, அவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். அந்தமானில் உள்ள இவரது உறவினர் கர்ணன் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் யோகேஷ்குமாரிடம் செல்போனில் பேசினார்.தூத்துக்குடி சென்று தினகரன் என்பவர் கொடுக்கும் பொருளை வாங்கி வந்து, காட்டுப்பரமக்குடி ஆனந்திடம் கொடுத்து, அவர் தரும் ஸீ25 லட்சத்தை வாங்கி வைத்திருக்குமாறு தெரிவித் தார்.
இதையடுத்து யோகேஷ் குமார் நேற்று முன்தினம் காலை தூத்துக்குடி சென்று, தினகரன் கொடுத்த போதைப் பொரு ளை பெற்றுக்கொண்டு, இரவில் பஸ்சில் ஊர் திரும்பி யது தெரிந்தது. யோகேஷ்குமாரிடமிருந்து கேட்டமைனை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசுக்கு துப்பு கொடுத்து விட்டு தலைமறைவான ஆனந்தை போலீசார் தேடிவருகின்றனர். போதைப்பொருள் இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.துப்புதுலக்குவதில் மும்முரம்: பயணிகள் பஸ்சில் போதைப் பொருள் கடத்தல் நடந்துள்ளதும், கடத்தல் கும்பலுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் போலீசுக்கு தகவல் தந்து ஒருவரை மாட்டிவிட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.அந்தமானில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தல் தொழிலை நடத்தி வந்த நபரைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதேபோல், தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருளைக் கொடுத்து அனுப்பிய நபரைப் பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். போலீசுக்கு தகவல் கொடுத்த ஆனந்த் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த 3 பேரையும் விசாரித்தால்எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறது, சம்பந்தபட் டவர்கள் யார் என போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்
.
dinakaran thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக