ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்த னர். அவரிடம் இருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டு
ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகள், கடை கள் மற்றும் சாலையோரங்க ளில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த மோட்டார் சைக்கிள்கள் மர்மமான முறையில் திருடு போய் வந்தன. இரவு நேரங் கள் மட்டுமல்லாது பகல் நேரத்திலும் ஆள்நடமாட்டம் மிகுந்த இடங்களிலும் கூட இத்தகைய திருட்டு சம்பவங் கள் அதிகரித்து வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிய டைந்தனர்.
இதைத்தொடர்ந்து ராமநா தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோரது உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப் பிரண்டு முரளிதரன் மேற்பார் வையில் பஜார் இன்ஸ்பெக் டர் கணேசன், சப்இன்ஸ் பெக்டர் கணேசலிங்க பாண் டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸ் அமைக் கப்பட்டது. இந்த படையினர் ராமநாதபுரம் நகர் முழுவதும் தீவிர ரோந்து சுற்றி மோட் டார் சைக்கிள் திருட்டு குறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
மோட்டார் சைக்கிள்கள்
இந்த நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் அரண் மனை பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டது டன், அதில் வந்த வாலிபரிட மும் விசாரணை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் தங் கப்பா நகர் பகு தியை சேர்ந்த துரைராஜ் மகன் கார்த்திக்(வயது 27) என்பவர் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளது தெரியவந் தது.
மேலும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் முதுகு ளத்தூர் அருகே உள்ள கோழிக் குளம் பகுதியை சேர்ந்த செந் தூரான் என்பவரது மகன் முத்துக்குமாருக்கு சொந்தமா னது என்றும், அவர் ராமநா தபுரம் சிகில்ராஜ வீதியில் ஒரு ஓட்டல் முன்பு தனது மோட் டார் சைக்கிளை நிறுத்தி சென்றபோது கார்த்திக் அதனை திருடியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தியதில், சூரங் கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார், லாந்தை சுலைமான், பாரதிநகர் பிரபு ஆகியோரது மோட்டார்சைக் கிள்களை திருடி முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ முந்தல் கிரா மத்தில் தனது மனைவி ஆறு முகக்கனி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாககூறினார்.
கைது
கொத்தனார் வேலை பார்த்து வந்த கார்த்திக் தின மும் சம்பாதிக்கும் பணத்தை குடித்து விடுவதால் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கவ னிக்க பணத்தேவை ஏற்பட்டு இதுபோன்று மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ள தும், இதனை நல்ல விலை கிடைக்கும் போது விற்க முடிவு செய்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிந்து கார்த் திக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
dailythanthi. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக