போபால், ஏப். 26-
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த மருத்துவமனையின் பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் சுமார் 30 நோயாளிகள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதுவரை 10 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக