காந்தகார், ஆப். 26-
ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இன்று பாப்பி (கசகசா) அறுவடை செய்யும் வேலைக்காக பஸ்சில் சென்றுகொண்டிருந்தனர். அந்த பஸ், மாய்வந்த் மாவட்டத்தில் சென்றபோது எதிரே வந்த எரிபொருள் டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரி தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் 30 பேர் பலியாகினர். 10 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்கர் லாரிக்கு தலிபான் தீவிரவாதிகள் தீ வைத்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இது விபத்துதான் என்றும், தலிபான்களுக்கு தொடர்பு இல்லை என்று காந்தகார் கவர்னரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலகில் மிக மோசமான சாலைகளில் சில சாலைகள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. இந்த சாலைகளில் விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக