puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 20 ஏப்ரல், 2013

இந்தியாவில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள்: ஜ.நா கவலை

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:35.42 PM GMT +05:30 ]
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஐ.நா. சபையின் கண்காணிப்பில் இயங்கி வரும் ”யூனிசெஃப்” (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கூறியுள்ளது.
இது தொடர்பாக யூனிசெஃப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கடந்த சில நாட்களாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை பார்க்கையில் வீதிகளிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக துரித நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

தற்போது டெல்லி ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி வரும் 5 வயது சிறுமி பூரண நலமடைய வேண்டும் என்ற அவரது பெற்றோரின் பிரார்த்தனையில் யூனிசெஃபும் பங்கேற்கிறது.
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுமிகள் என தெரிய வந்துள்ளது.

பச்சிளம் தளிர்கள் உள்பட சுமார் 7 ஆயிரத்து 200 சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதைவிட பன்மடங்கு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல், புகார்களாக பதிவு செய்யப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பினும், உரிய முறையில் பிரயோகப்படுத்தாத வரை இந்த சட்டங்களினால் பெண்களுக்கு பாதுகாப்போ, நிவாரணமோ அளிக்க இயலாது.

5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமை, சட்டங்களை சரியான முறையில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாய நிலையை தற்போது எற்படுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக