puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 20 ஏப்ரல், 2013

திண்டிவனம் அருகே அதிகாலையில் சோகம் திருட்டு மணல் லாரி ஏறி 3 பேர் உடல் நசுங்கி பலி






திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமம் புதுக்காலனியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்
(65). இவரது மகன் ஏழுமலை (35), மனைவி கோவிந்தம்மாள் (30). இவர்களுடைய குழந்தைகள் தீபா (13), பிரியா (8) ஸ்ரீதர் (10) மற்றும் ஏழுமலையின் தங்கை மகன் தீனாய் (5) ஆகியோர், மின்வெட்டு காரணமாக வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு படுத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் திருட்டு மணல் ஏற்றிக் கொண்டு, திண்டிவனம் & மயிலம் நெடுஞ்சாலையில் ஒரு லாரி சென்றது. வழியில் போலீசார் சோதனை நடத்துவது தெரியவந்ததால் லாரி டிரைவர் பயந்தார். உடனே, மெயின் ரோட்டில் இருந்து திருப்பி புதுக்காலனி வழியாக லாரியை ஓட்டிச் செல்வதற்காக, ரிவர்ஸ் எடுத்தபோது அரிகிருஷ்ணன் வீட்டு வாசலில் படுத்திருந்த குழந்தைகள் மீது லாரி சக்கரம் ஏறியது. அவர்கள் அலறி துடித்தனர். இதனால், லாரி டிரைவர் பதற்றம் அடைந்து லாரியை தாறுமாறாக இயக்க தொடங்கினார். இதற்கிடையே, சத்தம் கேட்டு ஏழுமலை எழுந்து வந்து பிரியா, தீபா இருவரையும் வெளியே இழுந்தார். ஆனால் அதற்குள் அவர் மீதும், கோவிந்தம்மாள், தீனாய், ஸ்ரீதர் ஆகியோர் மீதும் லாரியின் சக்கரம் ஏறியது. இதனால், லாரியை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.பிரேக் இல்லாமல் பின்னோக்கி வந்த அந்த லாரி, அரிகிருஷ்ணன் வீட்டின் மீது மோதி நின்றது.

லாரி சக்கரம் ஏறியதில் தீனாய், ஸ்ரீதர் ஆகிய இரு குழந்தைகளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மரண ஓலம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பினர். வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்தார். கோவிந்தம்மாள், பிரியா, தீபா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து, மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.திருப்பூர்: திருப்பூரில் இருந்து, காங்கயம் நோக்கி நேற்று அதிகாலை அரசு பஸ் சென்றது. முதலிபாளையம் பிரிவு அருகே, திருச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்ற வேன் பஸ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே திருச்சியை சேர்ந்த வேன் டிரைவர் செல்வம் (35), கிளீனர் பழனிச்சாமி (25) பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். திருப்பூர் ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மார்த்தாண்டம்: காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(53). நேற்று காலை பைக்கில் சென்னி தோட்டம் பாலம்  அருகே பைக்கில் வந்தபோது, முன்சிறையை சேர்ந்த பரத்(24) மற்றும் அவரது நண்பர் ஆனந்த்(23) ஆகியோர் வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் விஜயகுமார், பரத் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆனந்த் காயமடைந்தார். மார்த்தாண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்
.dinakaran thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக