puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தேசத்தை உலுக்கி உள்ளது! குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வேதனை!! [வெள்ளி - 26 ஏப்ரல்-2013 -



பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஒடிசா மாநில தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தாக்கப்படுவது போன்ற சீர்கேடான குற்றச்செயல்களுக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசிய நிலையில் நாடு உள்ளது. நல்லொழுக்க கல்வி மூலமாக இத்தகைய பிரச்சினைகளை அகற்றுவது குறித்த ஆலோசனைகளை கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். சமீபகாலமாக நடக்கும் சம்பவங்கள் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பதில் தோல்வியை சந்திக்கும் துரதிருஷ்டவசமான இந்த நிகழ்வுகளை படிப்படியாக குறைப்பதற்கு ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த குற்ற சீர்கேடுகள் சமூக செயல்பாட்டுக்கு மிரட்டல் விடுப்பதாக உள்ளது. இதற்கு பின்னணியில் உள்ள காரணங்களை களைவதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். பெண்களை மதிக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும். இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள், இளைஞர்களை பொறுப்பு உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக