புதுடெல்லி, ஏப். 26-
சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக தகவல் வந்தது. அங்கு இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இதுபற்றி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைநது, கூடாரங்கள் அமைத்துள்ளது என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா மற்றும் மூத்த அதிகாரிகள் இன்று பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
எல்லையில் உள்ள உண்மை நிலவரம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் நக்வி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கேட்டதையடுத்து, சர்மாவும் மற்ற அதிகாரிகளும் நிலைக்குழுவிடம் இத்தகவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இத்தகவல் நிலைக்குழுவுக்கு திருப்தி அளிக்காததால் கூட்டம் விரைவில் முடிந்தது. மே 30-ம் தேதி கூடும் அடுத்த கூட்டத்தில் முழு தகவல்களுடன் கூடிய அறிக்கையை அளிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக