- MONDAY, 22 APRIL 2013 19:24
நைஜீரியாவின் வடக்கே சாட் நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரை மையம் கொண்டு இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் சிக்கி 185 பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் ஆயுததாரிகள் ராக்கெட் மூலம் இயங்கும் கிரைனேட்டுக்களாலும் இராணுவத்தினர் அருகே உள்ள சனச்செறிவு மிக்க வதிவிடங்களில் மேஷின் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்திக் கொண்டனர்.
வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இம்மோதல் ஞாயிறு வரை தொடர்ந்ததாகவும் இதன் விளைவாக இறுதியில் சாட் ஏரியைச் சுற்றியுள்ள சூழல் பிணக்காடாகியதாகவும் கூறப்படுகின்றது. அதாவது இப்பிரதேசத்தில் நூற்றுக் கணக்கான வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்கள் எரிந்தும் சிதைவடைந்தும் உள்ளன. நைஜீரியாவில் போக்கோ ஹராம் போராளிகள் சமீப காலமாக இராணுவத்தினரை கன ரக ஆயுதங்களால் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறு பகல் சுமார் 185 சடலங்களை நைஜீரிய அதிகாரிகள் பாகா இல் கண்டெடுத்துள்ளனர். மேலும் பாகா நகரம் இதற்கு முன் யுத்தத்தினை சந்திக்காத ஒரு பிரதேசமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
2012 ஜனவரியில் வட நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான கனோவில் போக்கோ ஹராம் இயக்கத்தினரின் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் மூலமும் 185 பேர் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 160 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள பல்லின பழங்குடி மக்களுடைய0 நைஜீரியாவில் முஸ்லிம்களின் ஷாரியாஹ் சட்டத்தை அமுல் படுத்தவென போக்கோ ஹராம் அமைப்பினர் போராடி வருகின்றனர். 'போக்கோ ஹராம்' என்பதன் அர்த்தம் மேற்குலகக் கல்வி புனிதமற்றது என்பதாகும்.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக