மியன்மாரில் மீண்டும் கலவரம் – Video & Photos
கடந்த இரண்டு நாட்களாக மியன்மாரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. அதை தொடர்ந்து அங்கு தீவைப்பு, கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கலவரத்தில் ஏராளமான மசூதிகளுக்கு தீவைக்கப்பட்டன.
குறித்த கலவரத்தில் பெளத்த பிக்கு உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பெளத்த மதத்தினர், அப்பகுதியில் இருந்த 5 பள்ளிவாசல்களை இடித்துள்ளனர். இதனையடுத்து கலவரத்தைக் கடுப்படுத்த அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முஸ்லிம்களுக்கும் பெளத்த மத பிரிவினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
thihariyanews thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக