திங்கள், 18 மார்ச் 2013
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஜெயப்பிரபா (வயது 32). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
சில நாட்களில், ஜெயப்பிரபாவிற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜதுரை என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது. ராஜதுரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராஜதுரை ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து ராஜதுரை, ஜெயப்பிரபாவை கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில மாதங்களாக, ஜெயப்பிரபா, சேலம் ஜட்ஜ் ரோடு பகுதியில் வசித்து வந்தார். இந்த வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் ராஜதுரை மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வந்து தங்கி செல்வார். இதுபோல் நேற்று முன்தினமும் இன்ஸ்பெக்டர் ராஜதுரை வந்தார். அப்போது அவருக்கும், ஜெயப்பிரபாவிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயப்பிரபா, ராஜதுரை இருந்த அறைக்கதவை பூட்டி விட்டு மற்றொரு அறைக்கு சென்று பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சேலம் கன்னங்குறிச்சி போலீசாரிடம் ஜெயப்பிரபாவின் தாயும், அண்ணனும், ஜெயப்பிரபாவை இன்ஸ்பெக்டர் ராஜதுரை பல நாட்களாக அடித்து துன்புறுத்தி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் ஜெயப்பிரபாவின் தற்கொலைக்கு காரணம் எனப் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், இன்ஸ்பெக்டர் ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
tamil.webdunia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக