
தமிழக முதல்வரை சந்தித்த மைக்கேல் ராயப்பனை கடந்த பிப்ரவரி 2-ஆம்தேதி சட்டசபை விவாதத்தின்போது தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிமை குழுவின் பரிந்துறையின் பேரில் இது தொடர்பாக தே.மு.தி.க கட்சியின், சந்திரகுமார், அருட்செல்வன், செந்தில்குமார், முருகேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகிய 6 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று கொண்டு வந்தார். இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் வந்த கோரிக்கையை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது தண்டனை காலத்தை 6 மாதமாக குறைக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 6 தேமுதிக எம்எல்ஏக்களின் தண்டனை காலத்தை 6 மாதமாக குறைக்க வகை செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவர்களது தண்டனைக்காலம் 6 மாத காலமாக குறைக்கப்பட்டது.
www.inneram.com thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக