
நேற்று காலை டெல்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இலங்கை கண்டியை சேர்ந்த டபிள்யூ எம்.கே.பண்டாரா என்ற புத்தபிக்கு தலைமையில் பெண்கள் உட்பட 19 புத்த பிக்குகள் வந்திறங்கினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் "தமிழர்களை கொன்ற பாவிகளே" என்று கூறியவாறு அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த தாக்குதலில் ஒரு புத்த பிக்கு பெரிதும் நிலைகுலைந்து போனார்.
இந்த நிலையில் புத்த பிக்குகளுடன் சுற்றுலா வந்த பிற இலங்கை தமிழர்கள் அவரை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து மீட்டனர். பின்பு பாதிக்கப் பட்டவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து விட்டு சென்னை திரும்பியதாகவும், இந்த நேரத்தில் எதிர்பாராத தாக்குதல் நடந்துவிட்டதாகவும், ரூ.40 ஆயிரம் காணாமல் போய் விட்டதாகவும் பயணிகள் கூறினர்.
பின்னர், 19 பேரையும் ரயில்வே காவல்துறை அதிகாரி சேகர் தலைமையில், அவர்களை அழைத்துச் சென்று எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மகா போதி பவுத்த மடத்தில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்தனர்.
ஏற்கனவே தஞ்சை பெரிய கோவிலில் புத்த பிக்குகள் மீது இலங்கை தமிழர்கள் ஆதவராளர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத் தக்கது.
காணொளி
காணொளி நன்றி: சன் நியூஸ் தொலைக்காட்சி
inneram.com thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக