puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 3 மார்ச், 2013

புதிய கண்ணுக்குத் தெரியாத RADAR ! சாரதிகள் கவனம்!


on 03 March 2013.

எந்த வித அறிவிப்புப் பலகையும் இல்லை! எந்த விதமான வெளிச்சமும் அடிக்கவில்லை! ஆனாலும் நீங்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறியமை பதிவாகியுள்ளது. காவற்துறையினரின் வாகனங்களில் புதிய தலைமுறை வேகக் கணிப்புக் கருவிகள் (RADAR de nouvelle génération) நிரந்தரமாகப் பொருத்தப்படுகின்றன.

இவ்வகையான புதிய தலைமுறை வேகக் கணிப்புக் கருவிகளுடன் உள்ள காவற்துறையினரின் வாகனங்கள் எதிர்வரும் மார்ச் 15ம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படப் போகின்றன. இவை எந்த வித வேகக் கணிப்புக் கருவிகளைக் கண்டறியும் தொழில்நுட்பத்தாலும் கண்டறியப்பட முடியாதவை. முற்றிலுமாக கண்ணுக்குத் தெரியாத ஒன்றாகவே (radars invisibles) இது இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது நேற்று ஒரு முக்கியமான போக்குவரத்துப் பகுதியில் பரீட்சார்த்தமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது கட்டுப்பாட்டை மீறிய வேகத்தினை வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளது. கட்டுப்பாட்டை மீறிய வேகமே வீதிவிபத்துச் சாவுகளின் எண்ணிக்கையில் 26 சதவீதம் காரணமாகின்றது. அதாவது வருடத்திற்குக் கிட்டத்தட்ட 1000 பேர் கட்டுப்பாட்டை மீறிய வேகத்தினால் கொல்லப்படுகின்றனர்.

 

இந்த வாகனத்தில் பொருத்தப்படும் புதிய கண்ணுக்குத் தெரியாத வேகக் கணிப்புக் கருவிகள், மற்றும் விரும்பிய இடங்களில் பொருத்தப்படும் appareils mobiles embarqués, அண்மையில் பொருத்தப்பட்ட இரு இடைவெளிகளின் தூரத்தைக் கணிக்கும் வேகக் கணிப்புக் கருவிகள் (radars tronçons) மற்றும் நிலையான வேகக் கணிப்புக் கருவிகள் மூலம் 75 சதவீதமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகப் போக்குவர்த்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


"1972ம் ஆண்டில் வருடத்திற்கு 18,000 பேர் வீதி விபத்தில் உயிர் இழந்துள்ளனர். வேகக் கணிப்புக் கருவிகளுடன் 2002ம் ஆண்டில் வருடத்திற்கு 8,000 பேர் வீதி விபத்தில் இறந்தனர். மேலதிக வேகக் கணிப்புக் கருவிகளின் தொழில்நுட்பத்துடன் கடந்த வருடம் வீதி விபத்தக்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3645 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் புதிய தொழில்நுட்பத்துடன் இத் தொகை இன்னமும் கணிசமாகக் குறைக்கப்படும்" என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையிலான தொடர்பாளர் (délégué interministériel) Frédéric Péchenard தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டில் மட்டும் 14622 பேர் அதியுச்ச வேக மீற்லுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.


இந்தப் புதியதலைமுறை வேகக் கணிப்புக் கருவிகள் மூலம் வீதி விபத்துக்களில் சாவடைவோரின் எண்ணிக்கையை 2000ற்குக் குறைவாகக் கொண்டுவர போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கான அமைச்சகம் முயற்சிக்கின்றது. சாரதிகளே! வேகக் கணிப்புக் கருவிகளின் அறிவிப்புப் பலகைள் இல்லாவிட்டாலும் நீங்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறினால் தண்டிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளது. கட்டுப்பாட்டுடனான வேகம் எம் உயிருக்கும் மற்றவர்கள் உயிர்களுக்கும் பாதுகாப்பானது.

News :Source
eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக