puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 2 மார்ச், 2013

மக்களுக்கு தெரியப்படுத்தவே அமெரிக்க போர்க்குற்ற ஆவணங்களை வெளியிட்டேன்!


on 01 March 2013.

அமெரிக்காவின் போர் குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு வழங்கியதற்காக ராணுவ வீரர் பிராட்லி மேன்னிங் கைது செய்யப்பட்டார். இவர் மீது 12 குற்றச்சாட்டுகள் உள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்த போர் அறிக்கைகள், இரண்டு வீடியோ காட்சிகள்... 

மற்றும் வேறு சில ஆவணங்கள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் விக்கிலீக்ஸ்க்கு அளித்ததை பிராட்லி மேன்னிங் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரைச் சேர்ந்த இவர் 35 பக்க அறிக்கையை ராணுவ கோர்ட்டில் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் அந்நாட்டின் மக்களை நடத்திய விதத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இதனை வெளியிட்டேன்.

 

இதனை பொது மக்கள், குறிப்பாக அமெரிக்க மக்கள் தெரிந்து கொண்டால், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் ராணுவம் குறித்து விவாதங்கள் நடைபெறும் என்று நினைத்தேன். 2007 ஆம் ஆண்டு போரில் அமெரிக்க ஹெலிகாப்டர், 'ராய்ட்டர்' செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் உள்ளிட்ட 11 பேரை கொன்ற சம்பவம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.


வீடியோவில், அமெரிக்க படைகள் மகிழ்ச்சியாக இந்த ரத்த வெறியாட்டத்தை நிகழ்த்திய காட்சிகள் மிக ஆபத்தான அம்சமாகும். ஆனால் அமெரிக்காவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இது அமெரிக்காவுக்கு அவமானகரமான விசயமாக இருக்கும் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இவரை உலகிலுள்ள இடதுசாரி செயல்பாட்டாளர்கள் உண்மையை வெளிக் கொண்டுவந்த நாயகனாக கொண்டாடினர்.


இவர் ஆயிரம் நாட்களுக்கும் அதிகமாக காவலில் உள்ளார். இவரை ராணுவத்திலிருந்து நீக்கிய பிறகு தண்டனை வழங்கப்பட உள்ளது. இவர் மீது மேலும் 12 குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளது. ரகசிய அறிக்கைகளை வைத்திருந்தது, அதனை வெளியிட்டது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளது. இதற்காக அவருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

News : Source

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக