puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 13 மார்ச், 2013

இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் : மூலகர்த்தா இவர்களே..!பெண்களின் ஒவ்வொரு செயலும் படம்பிடிக்கப்படுகின்றன. அவர்கள் குளிப்பது, உடை மாற்றுவது மட்டுமில்லை. குனிந்து தரையை துடைப்பது, துணி துவைப்பது, குழந்தைக்கு பால் கொடுப்பது.. போன்ற ஒவ்வொன்றும் படமாக்கப்படுகிறது. ஓட்டல் அறைகளில், துணிக்கடையில் உடையை அணிந்து சரிபார்க்கும் அறையில், ஓட்டல் கழிப்பிடங்களில், பெண்கள் கூடும் இடங்களில் எல்லாம் அதற்காக ரகசிய குட்டி கேமிராக்களை பொருத்திவைத்திருக்கிறார்கள். 

அவைகள் படம்பிடிக்கும் அந்தரங்க காட்சிகளை இணையதளத்தில் போட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் நீங்களே இணையதளங்களில் பார்த்தால், உங்களுக்கு நெருக்கமான தோழிகள் படமோ, ஏன் உங்கள் படமோகூட இருக்கலாம். இந்திய பெண்கள் சமூகத்தில் இது ஒரு புதிய கலாசார சிக்கலை தோற்றிவித்திருக்கிறது. 

முன்பெல்லாம் பாதுகாப்பு நலன் கருதி வங்கிகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் ரகசிய கேமிராக்களை வைத்திருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இதை பெண்களின் அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள். 

அங்கே பதிவு செய்யப்படும் காட்சிகளில் பெண்களின் அந்தரங்கம் தொடர்புடையவைகளை மட்டும் அடுத்த நாளே யூடீப் போன்ற ‘வீடியோ ஷேரிங் சைட்’களில் போட்டுவிடுகிறார்கள். அதை உலகம் முழுவதும் உள்ள ‘செக்ஸ் ஊனம்கொண்ட ஆண்கள்’ பார்க்கிறார்கள். சிலர் பார்த்து ரசித்த வீடியோக்களை பேஸ் புக்கிலோ, கூகுள் பிளஸ்சிலோ பகிர்ந்துகொள்கிறார்கள். 

ஆபாச நீலப் படங்களை பார்த்து ரசித்து அலுத்துப்போன பல செக்ஸ் ஊன மனிதர்கள் இப்போது, இத்தகைய யதார்த்த அரைகுறை காட்சிகளை பார்ப்பதிலே அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். அவைகளை பார்த்துவிட்டு, ‘யதார்த்த காட்சிகள்’ என்று மெய்சிலிர்த்து பேசுகிறார்கள். அந்தரங்கங்களை படம்பிடிக்க இப்போது குட்டிக்குட்டி கேமிராக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. 

அதனை சுவர்கடிகாரம், வாட்ச், பேனா, டை போன்றவைகளில் எல்லாம் பொருத்திக்கொள்கிறார்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோ பிரேம், குளிர்பான பாட்டில்கள், கண்ணாடி, சூயிங்கம் பாக்கெட் போன்றவைகளில்கூட அந்த குட்டி கேமிராக்களை ஒட்டி வைத்துக்கொள்ளலாம். 

அவை 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை. அதில் பதிவாகும் காட்சிகளை ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் திரைகளில் ‘லைவ்’ ஆக பார்க்கவும், மெமரி கார்டில் சேமித்து வைக்கவும் முடியும். இத்தகைய குட்டிக் கேமிராக்கள் இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும் விற்பனையாகின்றன. 

விற்பனையை அதிகரிக்க அடிக்கடி விளம்பரமும் செய்கிறார்கள்.யார், என்ன தேவைக்காக இந்த கேமிராக்களை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு விற்பனையாளர் ஒருவர் பதிலளிக்கையில், “தங்கள் வியாபார நிறுவனத்திற்கு தேவைப்படுவதாகக்கூறி பலரும் வாங்கிச் செல்கிறார்கள். திருட்டை ரகசியமாக கண்காணிக்கவும், பெருமளவு பணம் கொடுக்கும்போது ஆதாரத்தை உருவாக்கவும் கேமிராக்களை பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். 

வீட்டில் உள்ளவர்களை கண்காணிக்கவும் சிலர் வாங்கி பொருத்துகிறார்கள்’’ என்கிறார்கள். முன்பெல்லாம் இத்தகைய கேமிராக்கள் வாங்குவது சிரமமாக இருந்தது. விலையும் மிக அதிகமாக இருந்தது. இப்போது சீன கேமிராக்களின் வருகையால் விலை குறைந்ததோடு, பட்டிதொட்டி எல்லாம் இத்தகைய கேமிராக்கள் கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது. 

இங்க் அடைத்து எழுதப் பயன்படும் மை பேனா போன்ற தோற்றத்தில் இருக்கும் குட்டி கேமிரா முன்பு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது அது போன்றவை 1500 ரூபாய்க்கே கிடைக்கிறதாம். இந்த கேமிராக்களை குழந்தைகள்கூட எளிதாக கையாளலாம். நேரடியாக சென்று வாங்க தயங்குபவர்கள், இணையதளம் மூலமாகவே ஆர்டர் செய்து, பார்சல் மூலம் பெற்றுவிடுகிறார்கள். 

பார்சல் கைக்கு கிடைத்த பின்பு பணத்தை கொடுத்தால் போதும் என்ற அளவுக்கு இந்த வியாபாரம் மலிவாகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இத்தகைய கேமிராக்கள் தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவைகளை வாங்குவது யார் என்று ஓரளவு அடையாளம் தெரிந்தாலும் அவர்கள் எதற்காக அவைகளை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் அறிய முடிவதில்லை. 


ஓட்டல் ஒன்றின் கழிவறையில் இந்த வகை கேமிரா ஒன்று இருந்ததை, கழிவறைக்கு சென்ற பெண் பார்த்துவிட்டார். புகார் செய்தார். விசாரணையில் அந்த கேமிராவை வைத்த ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக நடந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரே போலீசாரால் தாக்கப்பட்டார். 

கேமிராவில் அந்தரங்க காட்சிகளில் சிக்கிக்கொள்ளும் பெண் தனக்கு தெரிந்தவராக இருந்தால் அவரை பணத்திற்காகவோ, உடல் தேவைக்காகவோ கட்டாயப்படுத்தி ‘பிளாக் மெயில்’ செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பிரபலமான தீம் பார்க் ஒன்றில் ஏராளமான பெண்கள் குளிக்கிறார்கள். அதை அப்படியே படமாக்கி இணையதளத்தில் சேர்த்திருக்கிறார்கள். 

அங்கிருக்கும் பாதுகாப்பை மீறி, பொதுவாக அப்படிப்பட்ட வெகுநீள காட்சியை செல்போன் கேமிராவால் படம் பிடித்திருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் தன் சட்டை பாக்கெட்டில் குத்தியிருக்கும் பேனா கேமிரா மூலமோ, தன் தொப்பியில் ரகசிய கேமிராவை ஒட்டிவைத்துக்கொண்டோ அந்த காட்சிகளை படமாக்கி இருக்கலாம். 

இப்படிப்பட்ட காட்சிகளை இணையதளம் மூலம் விற்பனை செய்வதும் இப்போது அமோ கமாக நடக்கிறது. பெண்கள் குளிப்பதை, எண்ணை தேய்ப்பதை எல்லாம் படமாக்கிவைத்திருக்கும் அவர்கள், முதலில் ஒருசில கிளுகிளு காட்சிகளை காட்டிவிட்டு, ‘இவை எல்லாம் யதார்த்தமானவை. தொடர்ந்து இதை விட ‘சிறந்ததை’ பார்க்கவேண்டும் என்றால், உங்கள் கிரடிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்’ என்கிறார்கள். 

வளைகுடா நாடுகளில் இருந்து பலர் இவைகளை பணம் கொடுத்து பார்த்துவிட்டு, தங்கள் ‘அனுபவங்களையும்’ பதிவு செய்துவைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி நடக்கும் அசிங்கங்களை எல்லாம் தெரிந்துகொண்டு உள்ளபடியே பெண்கள் ரொம்ப பயந்துபோய்தான் இருக்கிறார்கள். 

கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தும் ஆசிரியை, “கரும் பலகையில் கையை தூக்கி எழுதும்போதே ரொம்ப கவனிக்கவேண்டியதிருக்கிறது. அப்போது புடவை சற்று இடம் பெயர்ந்தால்கூட காட்சியாக்கி விடுகிறார்கள். யாரையும் நம்ப முடியவில்லை. கல்லூரியில் சில மாணவர்கள் கையில்கூட இத்தகைய கேமிராக்கள் இருப்பதாக ஒரு சில மாணவிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் கையும் களவுமாக யாரையும் பிடிக்கவில்லை. அந்த அளவுக்கு தீவிரம் காட்டினால், கல்லூரி நிர்வாகம் என்ன சொல்லும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது’’ என்கிறார், அவர். பெருநகர் ஒன்றின் பேஷன் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் கழிவறையில் ரகசிய கேமிரா ஒன்றை மாணவி ஒருவர் கண்டுபிடித்தார். 

அதை ஆராய்ந்தபோது காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பதால் அது வழக்காகவில்லை. இன்னொரு பொது கழிப்பிடம் ஒன்றில் கேமிரா இருந்ததை கண்டறிந்த பின்பு அந்த கழிப்பறையையே மூடிவிட்டார்கள். துணிக்கடை ஒன்றில் துணியை உடுத்தி பார்க்கும் அறையில் கேமிரா இருந்ததை கண்டறிந்த மாணவி அதை தன் செல்போனில் படம்பிடித்து போலீசில் கொடுத்தார். 

மக்களுக்கும் அந்த தகவல் பரவ அந்த துணிக்கடை துவம்சம் செய்யப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்ஸ்கள் குளித்து உடை மாற்றும் அறையில் கீ செயின் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இரவு பணி முடிந்து அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டிருந்த நர்ஸ் கண்களில் அது பட, அப்படியே அதை எடுத்துக்கொண்டு போய் நிர்வாக தலைமையிடம் கொடுத்தார். 

அவர் அதை பரிசோதித்தபோது கேமிரா அதில் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தது. விசாரணையில் ஆஸ்பத்திரி டெக்னிக்கல் மேனேஜர் அந்த கேமிராவை பொருத்தினார் என்பதை கண்டுபிடித்தார்கள். என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றின் பெண்கள் ஹாஸ்டல் குளியல் அறையில் இருந்து கேமிரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்த மாணவியை கண்டுபிடித்தார்கள். 

முதல் கட்ட விசாரணையில் அந்த பெண், சும்மா விளையாட்டுக்காக அதை பொருத்தினேன் என்றார். போலீசார் அதில் தலையிட்ட பின்பு வழக்கின் கோணமே மாறியது. தனது காதலன் ஒருவனின் விருப்பத்தின் பேரில், அதை பொருத்தியதாக மாணவி கூறினார். விசாரணை விஸ்வரூபம் எடுத்தபோது இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. 

தற்போது குட்டி கேமிராக்களின் விற்பனை அதிகரித்து வருவதால், இது போன்ற பிரச்சினைகள் எல்லைமீறும் என்றே தெரிகிறது. பெண்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முடியும்.
செய்தி வகை: 


puthiyaulakam thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக