puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 10 மார்ச், 2013

தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி உடலுக்கு நல்லது


தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி உடலுக்கு நல்லது


தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்��
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடை பயிற்சியோ அல்லது ஓட்டப் பயிற்சியோ ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். 


இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். முகம் கூடுதல் அழகுடனும் காணப்படும். இளம் வயதில் செய்யப்படும் உடற்பயிற்சி மிகுந்த நன்மை பயக்கும். 

மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சினைகளுக்கு மூல காரணமான மனஅழுத்தம் குறையும் இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். 

கார்போஹைட்ரேட் மற்றும் புரதச் சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக் கொள்ளாமல் போனால் ஆராக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள். உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. 

40 வயதை எட்டிவிட்டால் நோய்களும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்து விடும். பல உடல் உபாதைகள் எட்டிப் பார்க்க தொடங்கி விடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சினைகளின் தொடக்கம் 40 வயதுதான். 

நீங்கள் காலையில் எழுந்ததும் வாக்கிங் செல்வதன் மூலம் உங்கள் கால்களை திடப்படுத்த முடியும்40 வயதில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பது, உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ எவ்வளவு உடற்பயிற்சி செய்தீர்களோ அதை பொறுத்துதான் அமைகிறது. 

மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள். 40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைப்பயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும்.


tmb  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக