தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சவூதியிலிருந்து திருப்பி அனுப்ப சவூதி அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வேலைவாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் வெளி நாட்டவர்களை கண்டறியும் நோக்கில் ஆயிரக்கானக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சோதனை என்ற பெயரால் நிதாகத் என்ற சட்டத்தின் கீழ் சவூதி அரசு கைது செய்துவருகிறது. இந்த சட்டதினால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடன்பட்டு, சொத்துகளை இழந்து வருமானத்திற்காக சவூதிக்கு சென்ற இந்திய குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மேற்படி சட்டத்தை சவூதி அரசு அமுல்படுத்துவதை குறிபிட்ட காலம் தள்ளி வைத்து வெளிநாட்டவர்கள் அந்நாட்டி-ருந்து வெளியேற அவகாசம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக்கொள்கிறது. தவிர்க்க முடியாமல் வெளியே அனுப்பப்படும் தொழிலாளர்களையும் பாதுகாப்பாக போர்கால அடிப்படையில் விமானங்களை அனுப்பி கைது செய்யட்டவர்களை விடுவித்து தாயகம் அழைத்துவர சவூதியில் உள்ள இந்திய தூதரம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக வலியுறுத்துகிறது.
அன்புடன்,
(ஜே.எஸ்.ரிபாயீ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக