puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 8 மார்ச், 2013

நாயகனை இழந்த கண்ணீரில் ஏழைகள் : ஹூகா சாவேஸின் வாழ்வும், மரணமும்வெனிசுலா நாட்டு அதிபர் ஹூகோ சாவேஸ் புற்றுநோயால் காலமானார். உலகம் முழுவதும் அவரது மரணத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் பிரசித்தம் பெற்ற அதேநேரம் சர்ச்சைக்குரிய அதிபராக விளங்கியவர் ஹூகோ சாவேஸ். புரட்சி கர தலைவர் என பெரும்பாலான வெனிசுலா மக்கள் அவரை கொண்டாடுவதற்கு என்ன காரணம் என இப்பதிவு அலசுகிறது. மீள்பதிவு செய்துகொள்ள அனுமதித்தமைக்காக யோ.திருவள்ளுவருக்கு நன்றி கூறி இங்கு 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக பதிவிடுகிறோம்.


ஹூகோ சாவேசின் மரணம் வெனிசுவேலாவிற்கு உள்ளும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வெனிசுவேலாவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமென்பது வெனிசுவேலாவின் தேர்தலையும், புதிய தலைமையையும் பொறுத்திருக்கும்.

வெனிசுவேலாவின் எண்ணை வளங்களை அமெரிக்க, பிரிட்டன் நிறுவனங்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெனிசுவேலாவின் சாமானிய மக்களுக்கு ரட்சகனாக வந்தவர் சாவேஸ். ராணுவத்தில் பணியாற்றிய அவர் வெனிசுவேலா ராணுவத்தில் புரட்சிப்படையை உருவாக்கி அதிபர் கால்லோஸ் ஆன்ட்ரேஸ் பெரேஸ் ஆட்சியை கவிழ்க்க 1992ல் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. அதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைகளில் கழித்த சாவேஸ் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1998ல் வெனிசுவேலா மக்கள் அவரை அதிபராக தேர்ந்தெடுத்தனர்.

அதிபரான சாவேஸ் எண்ணை நிறுவனங்கள் உட்பட பிரதான நிறுவனங்களை நாட்டுடமை ஆக்கினார். வெனிசுவேலாவின் பொருளாதார திட்டங்கள் ஏழைகளுக்கானதாக மாற்றப்பட்டது. கூட்டுறவுமுறையில் பயிற்சிகள் மற்றும் தொழில்கள் உருவாக ஆதரவும், உதவிகளையும் அரசு வழங்கியது. ஒருபுறம் ஏழைகளின் புரட்சிநாயகனாக சாவேஸ் உருவெடுத்துக் கொண்டிருக்கையில் நடுத்தர, பணக்கார, மத பழமைவாதிகள் எதிர்க்க துவங்கினர். பன்னாட்டு நிறுவனங்களை, எண்ணை நிறுவனங்களை நாட்டுடமையாக்கி வெனிசுவேலா அரசின் கட்டுப்பாட்டில் இயக்கியது. அமெரிக்காவின் கோபம் வெனிசுவேலா மீது திரும்பியது. பகிரங்கமான எச்சரிக்கைகள் பலமுறை. தொடர்ந்து ரகசியமான முயற்சிகள் என அமெரிக்க அரசும் அதன் உளவு அமைப்புகளும் சாவேசையும், அவரது அரசையும் வேட்டையாட முயற்சித்தன. நடுத்தர வர்க்கத்தையும், பணக்காரர்களையும், தனியார் ஊடகங்களையும், பழமைவாத திருச்சபையையும் சாவேசுக்கு எதிரான போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் ஈடுபட தூண்டியது அமெரிக்க அரசு. தனியார் தொலைக்காட்சிகள் அரசின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு இயங்கும் சூழல் உருவாக்கப்பட்டது.

சாவேஸ் அரசுக்கு எதிரான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற சாவேஸ் அதிபராக தொடர்ந்தார். சாவேஸை கடத்துவதற்காகவும், அரசை கவிழ்ப்பதற்காகவும் அமெரிக்காவின் துணையோடு சதி புரட்சி நடத்தப்பட்டது. அதிலிருந்து தப்பிய சாவேஸ் சில மணி நேரங்களில் மக்கள் முன் தோன்றி அரசை தொடர்ந்து நடத்தினார். அமெரிக்காவின் தடைகளும், தந்திரங்களும், கொள்கை மாற்றமும் சேர்ந்து வெனிசுவேலாவின் பண மதிப்பை வீழ்ச்சியடைய வைத்தது. உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவானது. சந்தையில் பொருட்களின் விலை உயர்ந்தது. பெருமளவில் அமெரிக்க டாலரை பயன்படுத்துகிற "dollarisation" நிலமை உருவானது. "டாலர் மயமாதல்" எந்த நாட்டிற்கும் அதன் சுயசார்பு பொருளாதாரத்திற்கும், நிலைத்தன்மைக்கும் விடப்படுகிற அமெரிக்க சவால். பல லத்தீன் அமெரிக்க அரசுகளை இந்த மாதிரியான பொருளாதார சீர்குலைவு ஆயுதம் தாக்கி வீழ்த்தி அமெரிக்கா சாதித்திருக்கிறது. எண்ணை வளமும், சாவேசின் தீர்க்கமான தலைமைத்துவமும் வெனிசுவேலாவை காப்பாற்றியது. வெனிசுவேலா மக்களுக்கு நேரடியாகவும், தொலைகாட்சிகளிலும் கேள்விகளுக்கு பதில்களை வழங்கி வந்தார் சாவேஸ்.

உள்நாட்டில் அவர் செய்த சீர்திருத்தமும், உலக அரங்கிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் அவர் முன்னெடுத்த அமெரிக்கா எதிர்ப்பும் உலகின் நாயகன்களில் ஒருவராக அவரை நிறுத்தியது. லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம், பொது வங்கி உட்பட பல விசயங்களில் சாவேஸின் பார்வையும், திட்டங்களும் வெனிசுவேலாவை கடந்து லத்தீன் அமெரிக்க மக்களையும், அரசுகளையும் பற்றிக் கொண்டது. சாவேஸை கவிழ்ப்பது, அழிப்பது என்பதில் மிக தீவிரமாக செயல்பட்ட ஜார்ஜ் புஸ் (2) பதவி முடிந்த பின்னரும் அதிபராக தொடர்ந்து நீடித்தார் சாவேஸ்.

பொலிவேரியன் புரட்சியை வெனிசுவேலாவிலும், வெளியேயும் தொடர்ந்து நடத்துவதில் உறுதியாக இருந்த சாவேஸை புற்று நோய் தாக்கியது. அவருக்கு நெருக்கமான க்யூபாவில் மருத்துவம் செய்து திரும்பிய சாவேஸ் நோயின் பிடியிலிருந்து மீளாமல் இறந்திருக்கிறார்.

வெனிசுவேலா, லத்தீன் அமெரிக்க எளிய மக்களுக்கு ஹூகோ சாவேஸ் என்றென்றும் புரட்சி நாயகன். கழுகின் அலகையும், நகங்களையும் பற்றிப் பிடித்திருந்த சாவேஸ் இன்றில்லை. அமெரிக்காவின் பார்வை வெனிசுவேலா அதிபர் தேர்தல் மீதும், ராணுவத்தின் மீதும் திரும்புகிறது. சாவேஸின் மரண அறிவிப்பு வந்தது முதல் எதிர்கட்சியினரும், நடுத்தர வர்க்கமும் கொண்டாட்டங்களையும், பிரச்சாரங்களையும் துவங்கிவிட்டார்கள். இணைய சமூக ஊடகங்களும் இம்முறை சேர்ந்து கொண்டுள்ளன. "அரபு வசந்தம்" போல அமெரிக்க சார்பு புரட்சியை உருவாக்க முயற்சிகளும் துவங்குகின்றன. மீண்டும் சவால்களுக்குள் வெனிசுவேலா மக்கள். நாயகனை இழந்த கண்ணீரில் ஏழைகள்.


நன்றி: கட்டுரையாளர் யோ.திரு


4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக