puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 31 மார்ச், 2013

மன அழுத்தத்தினால் நகர்ப்புற பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள்

, ஏப்ரல் 1-

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இக்காலத்தில் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சகஜமாகி உள்ளது.


பணியிலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாகச் சமாளித்து, உயர்ந்த நிலையை அடைவதில், குடும்பத்தில் ஒரு பெண் முக்கிய பங்கு வகிக்கின்றாள் என்றால் அது மிகை ஆகாது.

ஆயினும், அதிகரித்து வரும் மன அழுத்தங்கள் நகர்ப்புறப் பெண்களின் உயிரியல் சுழற்சியான மாதவிடாய்க் காலங்களை குறைக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது எழுந்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் குறித்து செயல்படும் சத்வம் என்ற அமைப்பானது, கடந்த ஐந்து வருடங்களாக பெண்களின் மாதவிடாய் நிறுத்தக் காலத்தினைப் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு பின்வருமாறு:-

ஆராய்ச்சிக்கு கணக்கெடுக்கப்பட்ட 980 பெண்களில், 264 பேர் 40 வயதுக்கு மேலும், 216 பேர் 35-40 வயதுக்குள்ளும், 432 பேர் 30-35 வயதுக்குள்ளும், 68 பேர் 25-30 வயதுக்குள்ளும் இந்த நிலையை எட்டியதாகத் தெரியவந்தது. 

இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 10 ஆண்டுகள் குறைவான காலகட்டத்தைக் குறிக்கின்றது. இதனால் பெண்கள் மனநிலை மாறுபாடுகள், மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றார்கள்.

இவர்களில் 42 சதவிகிதத்திற்கும் மேலானோர் பணிபுரிபவர்களாக இருக்கின்றனர். இந்த மாதவிடாய் சுழற்சி நிறுத்தம், இவர்களுக்கு தங்கள் தொழிலிலும், வாழ்க்கையிலும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்று இந்த அமைப்பின் இயக்குனரும், இயற்கை மருத்துவருமான டாக்டர் தீபக் ஷா தெரிவிக்கின்றார்.

நகர்ப்புற வாழ்க்கை முறைகள், மன அழுத்தத்தை அதிகரிப்பதால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைப்பேறின்மை போன்ற கவலைகள் ஏற்படக்கூடும். ஆனால், வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நவீன மருத்துவத் தொழில்நுட்ப உதவியுடன், இந்தக் குறைகளை நீக்கமுடியும் என்று மணிப்பால் மருத்துவமனையின், தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் காயத்ரி கார்த்திக் குறிப்பிடுகின்றார்.

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக