puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 12 மார்ச், 2013

வயிற்றுப்பிழைப்புக்காக இந்தியா வந்து சீரழிக்கப்பட்ட பெண்கள் கோர்ட்டு உத்தரவுப்படி பெற்றோரிடம் ஒப்படைப்பு



ராமநாதபுரம்,
வயிற்றுப்பிழைப்புக்காக இந்தியா வந்து சீரழிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்த வங்காளதேச பெண்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வீட்டுவேலை
வங்காளதேசத்தைச் சேர்ந்த சபீதாசரினா(வயது22), தாஸ்மா(26)(பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.) ஆகிய 2 பேரையும் கடந்த 2008–ம் ஆண்டு பெண் ஏஜெண்டுகள் 2 பேர் வீட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பெங்களூர் அழைத்து வந்தனர். அங்கு மற்றொரு ஏஜெண்டிடம் விற்பனை செய்து விட்டு சென்றுவிட்டனர். 2 பெண்களையும் விலைக்கு வாங்கிய ஏஜெண்டு அவர்களை சேலத்துக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

சேலம் போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அந்த 2 பெண்களையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாலியல் தொழில் தொழில் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுதலை செய்தார். ஆனால் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்த குற்றத்துக்காக 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
சிறை தண்டனை
இதைத் தொடர்ந்து வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் தண்டனை காலம் முடிந்ததும் வங்காளதேசத்துக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2 பேருக்கும் முறையான சான்றிதழ்கள் இல்லாததால் சேலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் வைத்திருக்க சேலம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு காப்பகத்தில் தங்கி இருந்த அவர்கள் திடீரென்று அங்கிருந்து தப்பி விட்டனர். பின்னர் அவர்களை மீண்டும் கைது செய்த சேலம் போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். காப்பகத்தில் இருந்து தப்பிய குற்றத்துக்காக அவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை காலம் முடிந்த பின்னரும் உரிய சான்றிதழ்கள் இல்லாததால் கோர்ட்டு உத்தரவுப்படி மண்டபம் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
இவர்கள் 2 பேரையும் சொந்த நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் வக்கீல் சேக் இபுராகிம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பாட்ஷா, தேவதாஸ் ஆகியோர் இந்த உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் 2 பேரையும் உறவினர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஆனால் அவர்களை ஒப்படைப்பு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் பெண்கள் 2 பேரையும் தாய்நாட்டுக்கு அனுப்ப மாநில அரசு மூலம் மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்றனர்.
அதன்படி தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக்கலிபுல்லா உதவியுடன் அந்த இரு பெண்களும் மேற்குவங்காள மாநிலம் ஹரிதாஸ்பூர் எல்லையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைதொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக வயிற்று பிழைப்புக்காக இந்தியா வந்து சிறைவாசம் அனுபவித்த வங்காளதேச பெண்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

dailythanthi. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக