puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 10 மார்ச், 2013

"நோயற்ற வாழ்வே... குறைவற்ற செல்வம்'


"நோயற்ற வாழ்வே... குறைவற்ற செல்வம்' என்பதுபோல் நோயின்றி வாழ்வதே நாம் சேர்த்துவைத்துள்ள மிகப் பெரிய செல்வம் என்பார்கள். இப்போது நோயின்றி வாழ்வது  அரிதாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அவரவர் வயதுக்கேற்ப ஏதாவது ஒரு காலகட்டத்தில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
 "எனக்கு எவ்வித நோயும் கிடையாது, மருந்துகள் உண்பது கிடையாது' என்று கூறுபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் உடல் உழைப்புதான் பிரதானமாக இருந்தது. தற்போது உடல் உழைப்பு அரிதாகி விட்டது.

  வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து நானும், தினமும் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் அல்லது 10 மணி நேரம் உழைக்கிறேன் என்கின்றனர். எப்படி..? அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி கணினியிலும், காரில் அமர்ந்தபடியே மடிக் கணினியிலும், செல்பேசியில் பேசியபடியும் வேலை பார்ப்பது உடல் உழைப்பாகாது. அன்று உழைப்புக்கு அர்த்தம் கொடுத்தனர். வயலில் ஏரை சுமந்துச் சென்று, மாடுகளைப் பூட்டி உழுத காலம்போய் இன்று டிராக்டர் வைத்து உழும் நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி ஆலைகளில் வேகவைக்கப்படும் நெல்லை பெரிய அளவிலான வாளியில் சுமந்தபடி களத்தில் கொண்டுபோய் கொட்டி, அதை உலரவைத்து அரிசியாக மாற்றிய காலம் போய், இன்று வேக வைத்த நெல்லை இயந்திரம் மூலம் காயவைத்து அரிசியாக மாற்றும் காலம் வந்துவிட்டது.
 இப்படி நமது வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு பணியிலும் உழைப்பு என்பது குறைந்து விட்டது. நாற்காலியில் அமர்ந்தபடியே பணியில் ஈடுபடும் நம்மால் தினமும் உண்ணும் உணவுகூட ஜீரணமாவாதற்கு நேரம் கொடுப்பதில்லை. அதற்குள் அடுத்த உணவுவேளை வந்து விடுகிறது. மீண்டும் உணவைத் தேடிச் செல்கிறோம். வள்ளுவர் கூறியதுபோல்,
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்துவரக் கூடிய உணவை அருந்த வேண்டும். இன்று வாழ்க்கையில் உழைப்பு என்பது காணாமல் போய்விட்டது. மனிதன் தினமும் 24 மணி நேரத்தில் 6 மணி நேரம் தூக்கத்திற்கும், 8 மணி நேரம் உழைப்புக்கும் 2 மணி நேரம் அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஒதுக்க வேண்டும். மீதியுள்ள நேரத்தில் கவலைகளை மறந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
 ஆனால், உழைக்கிறோம் என்ற மாயையை உருவாக்கி, சரியான திட்டமிடல் இன்றி பல மணி நேரத்தை வீணாக்கிவிட்டு, தூங்கும் நேரத்தை குறைத்துக் கொள்கிறோம். இதனால் நோய் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. தீய பழக்கங்கள் இல்லாதவர்களுக்கே இப்படி என்றால், புகை, மது போன்ற தீய பழக்கங்கள் உள்ளவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை, அவரவர்களுக்கே தெரியும்.
  அந்தக் காலத்தில் ஏதேனும் நோய் வந்தால், கை வைத்தியம்தான். அல்லது ஊரில் உள்ள ஒரேயொரு நாட்டு வைத்தியர்தான் அனைத்து விதமான நோய்க்கும் மருந்து அளிப்பார். ஆனால், இன்று அப்படி இல்லை; மனிதனின் உடல் பாகங்களைக் கூறுபோட்டு வைத்தியம் பார்க்கும் நிலை வந்துவிட்டது. இதில் யாரையும் குறைகூற முடியாது.
 சாதாரணக் காய்ச்சல் என்றால் நாம் ஓடிச் சென்று மருத்துவரை அணுகுகிறோம். அவரும் மருந்துக் கடைக்காரருக்கு மட்டுமே புரியும்படியான எழுத்தில் மருந்தின் பெயரை எழுதிக் கொடுக்கிறார். நாமும் ஏதோ புதிய மருந்து என்று நினைத்தால், அது தவறு... அந்த மருந்து பெட்டிக்கடையில்கூட கிடைக்கக்கூடிய "பாரசிட்டமால்' மாத்திரைதான். அதிலும் சரியாகவில்லை என்றால், உடனே ரத்தப் பரிசோதனை, என பரிசோதனையின் பட்டியல் நீளுகிறது.
  அன்று அரிதாக இருந்த போக்குவரத்து காரணத்தினால் நடைப்பயணமே பிரதானமாக இருந்தது. இன்று சிறிது தொலைவு செல்ல வேண்டும் என்றால் இரு சக்கர வாகனங்களையும், பஸ்ûஸயும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. தற்போது உடலுக்குப் பயிற்சியை தரும் சைக்கிளைக் காண்பது என்பது அரிதாகிவிட்டது.
 இதேபோல் பெண்களும் கிணற்றில் நீர் இறைப்பது, ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது, உரலில் மாவிடிப்பது, குனிந்து வீடு மெழுகுவது போன்ற வேலைகளை மறந்துவிட்டதால் உடல் தளர்ந்து மூட்டுகளில் வலி ஏற்பட்டு கை - கால்களில் வலு இழந்து வருகின்றனர்.
  அன்று மனிதன் வாழ்க்கையில் உழைப்பு அதிகமாக இருந்ததால் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்ற நோயின்றி இருந்தனர். தற்போது 35 வயதைத் தாண்டியவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
  உலக சுகாதார அமைப்பு 2012ஆம் ஆண்டு 194 நாடுகளில் நடத்திய ஆய்வில் ஆண்களில் 10-இல் ஒருவருக்கு சர்க்கரை அல்லது ரத்தக் கொதிப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
 தற்போது அலுவலகத்திலும், வீட்டிலும் அதிக "பதற்றமாக' காணப்படும் பலருக்கு ரத்தக் கொதிப்பு நோய் ஏற்பட்டுவருகிறது. புரதச் சத்தில்லாத உணவைச் சாப்பிடுபவர்கள் பலர் சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவற்றிலிருந்து தப்ப (முழுவதும் குணமாக அல்ல... கூடுதலாகாமல் கட்டுப்படுத்த) மருத்துவர்கள் கூறும் அறிவுரை.. வாழ்நாள் முழுவதும் மருந்துடன் தினமும் நடைப்பயிற்சி தேவை.
 அன்று நம்மைக் கண்டு "நோய்' பயந்து ஓடியது. இன்று அப்படியில்லை, நோயைக் கண்டு நாம் தினமும் பயந்து "ஓடி'க் கொண்டிருக்கிறோம் (வாக்கிங்...ஜாக்கிங்).
  ஆகவே, சரியான முறையில் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, எளிய உடற்பயிற்சியுடன் இயற்கை தரும் சத்தான உணவுகளை உண்பதுடன், திட்டமிட்டு வாழ்க்கையை வாழ்ந்தால் நோய்களை நாமும் வெல்லலாம்.
 உணவில் அவசியம் புஞ்சைத் தானியங்களையும் கீரை வகைகளையும் துவர்ப்பு, கசப்பு உள்ள காய்கறிகளையும் அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
R.KUNASEKARN  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக