நீங்கள் எத்தனையோ விசித்திரமான மனிதர்கள் பற்றி எமது தளத்தில் பார்த்திருப்பீர்கள். இதுபோன்று இன்றைய விசித்திர மனிதர்கள் பகுதியில் நீங்கள் பார்க்கவிருப்பது ஒரு ஆண். இந்தியாவில் பிறந்த முகமது லத்தீஃப் ஹதானா என்ற பெயருடைய 32 வயதான இவருக்கு இருக்கும் ஒரே குறை சாதாரண மனிதர்களை போன்று இவருக்கு முகம் இல்லை.
மிகவும் அரிதான தோல் நோயில் கொடிய தாக்கத்தினால் இவர் முகமே இல்லாமன் இவ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் வாழ்க்கையில் இடம் பெற்ற இன்னுமொரு சுவாரசிய சம்பவமே இவரது திருமணம். கறுப்பாக இருக்கும் ஆண்களையே வெறுக்கும் பெண்கள் கொண்ட இச்சமூகத்தில் இவரை மணதார மணம் முடித்திருக்கிறார் 25 வயதான சலீமா. இவருக்கு ஒரு கால் மட்டுமே இருக்கின்றமை வேதனைக்குரிய விடயம்தான்.
இருந்தபோதிலும் இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக வாழ்க்கை நடத்துகின்றார்கள். இதற்கு சான்றாக பிறந்துள்ள அழகிய ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தை. சோதனைக்கடலில் தத்தளித்து இவர்களது மணவாழ்க்கையை மகிழ்ச்சி கடலில் நீந்தச்செய்தது அந்தக்குழந்தை. காரணம் தாய் அல்லது தகப்பனிடம் இருக்கின்ற குறைபாடுகளுக்கு அப்பால் அக்குழந்தை சாதாரணமான ஒரு ஆரோக்கியமான குழந்தையாக பிறந்தமையே.
முகமே இல்லாத கணவருடன் வாழ்க்கை நடத்துவது பற்றி அவரது மனைவி சலீமா கூறுகையில்:- “நான் அவரை ஒரு வித்தியாசமான மனிதராக பார்க்கவில்லை. அவர் மீது நான் கொண்ட காதலே எங்கள் இணைவுக்கு காரணம். பலர் அவரது முகத்தை பார்க்க சலிக்கலாம். ஆனால் நான் அவரது முகத்தையே கடவுளாக பார்க்கிறேன். மருத்துவர்கள் இவரது முகத்தை சரிசெய்வது கடினம் என்றார்கள். ஆனால் இப்போது நான் சொல்கிறேன் அது முடியும் என்றாலும் தேவையில்லை காரணம் எங்களுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. இனி அவளே எமது சந்தோசம் என்றா
puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக