![]() |
![]() |
கொங்கோவில் நடந்த விமான விபத்தில் 36 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கொங்கோ நாட்டின் கிழக்கு நகரமான கோடாவில், கடும் மழை காரணமாக பயணிகள் விமானம் லேன்டிங் செய்வதற்கு சற்றுமுன் விபத்துக்குள்ளானது. Fokker 50 ரக விமானம் இது. |
அதிகபட்சம்
50 பேர் வரை பயணம் செய்யலாம். சி.ஏ.ஏ. என்ற விமான நிறுவத்தால் விமானம்
இயக்கப்பட்டது. கொங்கோ அரசு போக்குவரத்துதுறை அதிகாரி லம்பர்ட் மென்டே,
“விமானத்தில் பெருமளவு கார்கோ ஏற்றப்பட்டிருந்தது. முழுமையான எண்ணிக்கையில் 50
பயணிகள் விமானத்தில் இருக்கவில்லை. எத்தனை பயணிகள் பயணம் செய்தனர் என்ற விபரம்
எம்மிடம் இல்லை” என்றார்.
News : Source
news eutamilar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக