puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 5 மார்ச், 2013

சாவேஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


சாவேஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


March 5, 2013  05:13 pm
வெனிசுலா அதிபரான ஹியூகோ சாவேஸ் (வயது 58),புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தன. எனவே அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 16 திகதி அவரின் புகைப்படங்களை வெனிசுலா அரசு வெளியிட்டது.


இந்நிலையில் வெனிசுலா அதிபர் சாவேஸ் 19-ம் திகதி நாடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த சாவேசுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. ராணுவ ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெனிசுலாவின் தகவல் தொடர்புத்துறை மந்திரி எர்னெஸ்டோ வில்லேகஸ் கூறியதாவது:-

சாவேசின் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக சுவசக் கோளாறு தீவிரமடைந்தது. அவருக்கு புதிய தொற்று உருவாகியுள்ளது. அதிபருக்கு அதிக சக்தி கொண்ட கீமோ தெரபி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. அவர் உயிருக்கு போராடி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

அதிபரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால்,அவர் சிகிச்சை பெற்று வரும் ராணுவ மருத்துவமனையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக