
இவர்களுக்கு இந்த வயதிலேயே காதலர்கள். இந்த காதலர்களுடன் இன்பச் சுற்றுவாலாக பல்வேறு ஊர்களுக்குப் போக திட்டமிட்டு கிளம்பியுள்ளனர். இதில் மூன்று மாணவிகளின் காதலர்களும் வந்து விட்டனர். ஆனால் நான்காவது மாணவியின் காதலன் மட்டும் என்ன காரணத்தாலோ வரவில்லை என்று தெரிகிறது. 3 மாணவர்களில் ஒருவன் பிளஸ் ஒன் படிக்கிறான். மற்ற இருவரும் டுடோரியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். நான்கு மாணவிகளும் மற்றும் 3 மாணவர்களும் கடந்த மாதம் 23ம் தேதி பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸுக்குப் போவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அப்படியே ரயில் ஏறி சுற்றுலாவைத் தொடங்கி விட்டனர். ஸ்பெஷல் கிளாஸுக்குப் போன பிள்ளைகளைக் காணாததால் பரிதவித்துப் போன பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணையில், நான்கு மாணவிகளும் 3 மாணவர்களுடன் மாயமான தகவல் தெரிய வந்தது.
இந்த நிலையில்தான் ஒரு மாணவி தனது தந்தையின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்திப் பணம் எடுத்தபோது அதுகுறித்த தகவல் தந்தையின் செல்போனுக்கு வந்து அவர்கள் தங்கியிருந்த இடம் குறித்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து சிறப்புப் படை போலீஸார் புனே நகருக்குச் சென்று அவர்களை மீட்டனர்.
பின்னர் அனைவரும் நெல்லை கொண்டு வரப்பட்டனர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரத்திலும், மும்பையிலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதைக்கேட்டு போலீஸாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 7 பேரையும் போலீஸார் நெல்லை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராமலிங்கம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அதன்படி நான்கு மாணவிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 பவுன் நகைகளுடன் கிளம்பி வந்த மாணவி
இந்த நான்கு மாணவிகளில் ஒருவர் தனது வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ. 40,000 பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது அனைவரையும் அதிர வைப்பதாக உள்ளது. 7 பேரும் முதலில் கன்னியாகுமரி போயுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் போனார்கள். அங்கு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியுள்ளனர். அங்கு நான்கு மாணவிகளையும் ஒரு ரவுடிக் கும்பல் மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 7 பேரும் உடனடியாக லாட்ஜைக் காலி செய்து விட்டு மும்பைக்குப் போயுள்ளனர். ஆனால் அங்கும் ஒரு கும்பலால் நான்கு மாணவிகளும் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உண்மையா.. பொய்யா?
ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு ஊராக பாலியல் பலாத்காரம் நடந்ததாக இவர்கள் கூறுவது குறித்து போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்கள் வந்துள்ளன. உண்மையில் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் ரவுடிகளா அல்லது மாணவர்களின் கூட்டாளிகளா என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் தவிர கடைசி நேரத்தில் சுற்றுலாவில் கலந்து கொள்ளாமல் போன இன்னொரு மாணவரையும் பிடித்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
news tamilcloud thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக