லண்டன்
பிரசித்த பெற்ற பி.பி.சி. வானொலிச் சேவை இலங்கையிலும் கிடைத்து வந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் வாழுகிற பகுதியில் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் பற்றிய செய்தியை பி.பி.சி. கொண்டு போய் சேர்த்து வந்தது.
ஆனால் இந்த வானொலியின் தமிழ் மற்றும் ஆங்கிலச் சேவையில் தடங்கலும், குறுக்கீடும் ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து இலங்கையில் தனது ஒலிபரப்புச் சேவையை பி.பி.சி. நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக பி.பி.சி.யின் உலக சேவை இயக்குனர் பீட்டர் ஹார்ராக்ஸ் கூறுகையில், ‘‘இலங்கையில் உள்ள எங்கள் நேயர்களுக்கு ஒலிபரப்புச்சேவை வழங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். தொடர்ந்து எங்கள் ஒலிபரப்புச் சேவையில் திட்டமிட்டு குறுக்கீடு செய்வது என்பது நம்பிக்கை மோசடி ஆகும். அதை பி.பி.சி. அனுமதிக்காது’’ என்றார். தமிழ் மக்களுக்கு எதிராக ராஜபக்சே இழைத்து வருகிற அநீதியில் இந்தச் செயலும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
dailythanthi thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக