மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை
தூத்துக்குடி மாவட்ட மக்களை மிகவும் அச்சுரித்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியிருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
கடந்த மார்ச் 23 தேதி அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு மக்களை பீதிக்குள்ளாக்கியது அடுத்து ஒரு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகிறது.
மேலும் இந்த ஆலையை மூட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் எடுத்தவந்த முயற்சிகளுக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு பலனாக இதை கருதுகிறோம். இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கேட்டுக்கொள்கிறது.
அன்புடன்,
(எம். தமிமுன் அன்சாரி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக