
புதுடெல்லி:குண்டுவெடிப்புகளின் பெயரால்
ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்
இளைஞர்களுக்கு வாழ்க்கை சித்திரவதையாக மாறும் வேளையில் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்
குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி
ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி
வருகிறது
.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்
இளைஞர்களின் குடும்பங்கள் துயரத்தில் வாடுகின்றன. பல்வேறு குண்டுவெடிப்புகளில்
முக்கிய சூத்திரதாரி என்று என்.ஐ.ஏ கண்டுபிடித்த ஹிந்துத்துவா தீவிரவாதி
புரோகித்திற்கு அரசு கஜானாவில் இருந்து சம்பளம் செல்லும் அவலம் இந்நாட்டில்
தொடருகிறது.
புனேயில் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் கண்ட்ரோலர், தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில்
அளித்துள்ளார். புரோகித்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது
என்று அவர் கூறியுள்ளார்.
புரோகித்தை கஸ்டடியில் பெற்று விசாரணைச்
செய்யவேண்டும் என்று என்.ஐ.ஏ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு
பரிசீலனையில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து எதுவும் தெரியாது என்று கண்ட்ரோலர் பதில்
அளித்துள்ளார்.
2008-ஆம் ஆண்டு புரோகித் கைதானதைத் தொடர்ந்து
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின்(எ.எஃப்.டி) விசாரணை கமிஷன் இவரை ராணுவத்தில் இருந்து
வெளியேற்றவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், தனது முன்னிலையில் முக்கிய சாட்சிகளை
விசாரிக்கவில்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்த தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும்
எனவும் புரோகித் கோரியதைத் தொடர்ந்து புதிய விசாரணை தேவை என்று எ.எஃப்.டி
ராணுவத்திடம் அறிவுறுத்தியது. இவ்விசாரணை முடிவுற்று விசாரணை அறிக்கை பாதுகாப்பு
அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு
நடந்த பிறகும் புரோகித்தை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவில்லை. இதன் காரணமாக
புரோகித் சம்பளம் மற்றும் இதர படிகளை பெற தகுதியுள்ளவர் என்று உயர் ராணுவ
அதிகாரியொருவர் கூறுகிறார்.
அதேவேளையில், மூத்த ஹிந்துத்துவா தலைவர்கள் மற்றும்
பத்திரிகையாளர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக குற்றம்
சாட்டி டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனில்(டி.ஆர்.டி.ஓ) ஜூனியர் ரிசர்ச்
ஃபெல்லோவாக பணியாற்றிய அஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள்
நீக்கிவிட்டனர் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது
ஜாமீனில் விடுதலையான மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க கூட தேசிய புலனாய்வு
ஏஜன்சியால் இயலவில்லை. இவ்வழக்கில் இதர இரண்டு நபர்கள் மீது ஆதாரங்களை சமர்ப்பிக்க
கூட முடியவில்லை.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக