லண்டன், மார்ச்.30-
இங்கிலாந்தில் கடந்த 50 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராயல் மருத்துவக் கல்லூரியும், ராயல் மனநிலை மருத்துவ கல்லூரியும் இணைந்து சிகரெட் பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் இங்கிலாந்தில் 1 கோடி பேர் சிகரெட் பிடிப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 30 லட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் மனநலம் பாதிக்கும் வகையிலான போதை பொருட்களை புகைப்பவர்கள்.
10 லட்சம் பேர் பல வருடங்களாக மனநோய் பாதித்து அதன்மூலம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. சிகரெட் பிடிப்பவர்களில் 30 லட்சம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது சிகரெட் புகைப்பதற்கும், மனநோய்க்கும் தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் சிகரெட் பழக்கம் ஒருவித மனநோயின் அறிகுறியாக தெரிகிறது என்றும் கூறுகின்றனர். அதிக அளவில் சிகரெட் பிடிப்பவர்கள், மனநல டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறுவதே சிறந்த வழி என்றும், இங்கிலாந்து நுரையீரல் அறக்கட்டளை அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் ஸ்பிரோ தெரிவித்துள்ளார்

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக