- Friday, 08 March 2013 16:47
உத்திரபிரதேசத்தில்
நடந்த கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டி எஸ் பியின் மனைவி, மாநில அரசுக்கு
கோரிக்கை வைத்துள்ளார்.அதாவது, தங்களது உறவினர்களில் 8 பேருக்கு அரசு வேலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கலவரத்தில், டி எஸ்.பி ஜியாவுல் ஹக் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி பர்வீன் ஆசாத்துக்கு டி எஸ் பி பதவியும், சகோதரர் சொரப்புக்கு இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க உத்திர பிரதேச அரசு முன்வந்துள்ளது.
ஜியாவுல் ஹக்கின் உறவினர்கள் பலர் தங்களுக்கும் அரசு வேலை வேண்டும் என்று பர்வீனை வற்புறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதை அடுத்து நெருக்கமான உறவினர்கள் 8 பேருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று பர்வீன் ஆசாத், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் 8 பேருக்கு அரசு பணி வழங்க அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்வரமாட்டார் என்று கூறப்படுகிறது.
.4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக