- Thursday, 07 March 2013 07:48

உலகச் சந்தையில் தற்போது Embrace+ எனப்படும் 30 யூரோ பெறுமதியானத் தொலையுணர்வுக் காப்பு (Bracelet) அறிமுகப் படுத்தப் பட்டு பிரபல்யமாகி வருகின்றது.
இக்காப்பின் மூலம் வாடிக்கையாளர் தனது மனைவியிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பையோ அல்லது தனது விருப்பத்துக்குரிய பிரபலம் ஒருவர் புதிய டுவீட் ஒன்று அனுப்பியுள்ளார் என்ற சமிக்ஞையையோ உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
அதாவது இந்த Embrace+ கைக்காப்பினை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பத்தின் மூலம் ஒரு ஐ-போன், கணனி அல்லது அன்ட்ரொயிட் ஹான்ட்செட்டுடன் இணைப்பு ஏற்படுத்தி ஒரு குறித்த நபர் இமெயில் அனுப்பினாலோ அல்லது டுவீட் செய்தாலோ அல்லது ஒரு பேஃஸ்புக் தகவல் அனுப்பினாலோ உடனே சிக்னல் பெற முடியும். அதாவது குறிப்பிட்ட நபர் அல்லது அழைப்புக்கு ஏற்ப வித விதமான நிறத்தில் இந்தக் காப்பினால் ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.
இந்த புதிய காப்பு தொடர்பானை (Bracelet communicator) அறிமுகப் படுத்திய கண்டுபிடிப்பாளர்கள் இது தமது பாக்கெட்டில் மொபைல் தொலைபேசியை வைத்துப் பயணம் செய்வதற்கு அசௌகரியமுடையவர்களுக்கு மிகவும் உபயோகமானது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் காப்பினை ஒரு தடவை சார்ஜ் பண்ணினால் 10 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் ஒரு நாளைக்குச் சராசரியாக 100 அழைப்புக்களை இதனால் வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் வடிவமைப்பு மூன்று விதங்களில் கிடைக்கும் எனவும் இது அவரவருக்குப் பிடித்த இரத்தினத்தில் தங்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது. மேலும் இந்தக் காப்பில் உள்ள இரத்தினங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான அழகிய, நீண்ட காலம் பாவிக்கக் கூடியவை என்பதுடன் அரிதானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் காண்க :
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக