
கோலாலம்பூர், 4 மார்ச்- சபாவில் ஊடுருவல்காரர்களின்
முற்றுகை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் பக்காத்தான் கட்சியைச் சேர்ந்த
தியான் சுவாவின் அர்த்தமற்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று தலைநகர்
துகு நெகாராவில் சுமார் 300 பணிஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மறியலில்
ஈடுபட்டனர்.
முன்னாள் போலீஸ் படைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள்
மற்றும் இதர அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த மறியலில் அவர்கள் பத்து தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் தியான் சுவாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகள்
ஏந்தியிருந்தனர்.
சபாவில் ஊடுருவல்காரர்கள் ஊடுருவியுள்ளதும் அதற்கு
அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில்
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் அரசியல் நாடகம் என தியான் சுவா
கூறியிருந்தார்.
அந்த அடிப்படையற்ற குற்றஞ்சாட்டுக்காக அவர்
அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மறியலில் கோரிக்கை
விடுக்கப்பட்டது.
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக