puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 7 மார்ச், 2013

3 வயது சிறுமியைக் கடத்தி கற்பழித்த நபருக்கு வலை வீச்சு

[ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி, தனது 3 வயது குழந்தையுடன் கேரளாவுக்கு சென்று அங்கு மலப்புறம் மாவட்டம், திரூர் என்ற ஊரில், ஒரு வைத்தியசாலையின் அருகில் உள்ள கடையின் காம்பவுண்டுக்குள் தங்கி இருந்தார்.
அந்தப் பகுதியில் கிடைக்கும் வேலையைச் செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவரும், குழந்தையும் அன்றாட வாழ்க்கையை நடத்தியதோடு, இரவில் அந்தக் கடையின் வளாகத்தில் ஒரு ஓரமாக தங்கி வந்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு, தாயும் அந்தக்குழந்தையும் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, படுத்து தூங்கினார்கள். மறுநாள் காலையில் விழித்துப்பார்த்தபோது, தன் அருகில் படுத்து இருந்த குழந்தையை காணாமல், தாய் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இதுபற்றி அருகில் இருந்த பொலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பொலீஸாரும், குழந்தையின் தாயும், அக்கம் பக்கத்தினரும் அந்தப்பகுதி முழுவதும் குழந்தையை தேடியபோது ஒரு கட்டிடத்தின் அருகில், உடல் முழுவதும் எறும்புகள் மொய்த்தபடி, மயங்கிய நிலையில் அந்தக்குழந்தை கிடந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர்.
பதற்றத்துடன் குழந்தையை தூக்கியபோது, அந்தக்குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடல் முழுவதும் காயங்களும் இருந்தன. இரவில் அந்தக் குழந்தையை சில காமுகர்கள் கடத்திச்சென்று, கற்பழித்து, வெறியாட்டம் ஆடிவிட்டு, அந்தக் கட்டிடத்தின் அருகில் வீசி விட்டு சென்று இருப்பது அப்போது வெளிச்சத்துக்கு வந்தது.
உடனே அந்தக்குழந்தையை திரூர் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்தக் குழந்தைக்கு 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. தற்போது அந்தக்குழந்தை நலமாக இருப்பதாவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக திரூர் பொலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "இந்த கொடூரச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க சிறப்பு பொலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், சந்தேகத்தின் பேரில் 14 காமுகர்களை உடனடியாக பிடித்து, அவர்களிடம் துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது" என்று கூடுதல் பொலீஸ் டி.ஜி.பி. சங்கர் ரெட்டி தெரிவித்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளா மாநில மகளிர் ஆணைய தலைவி கே.சி. ரோசா குட்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்தக்குழந்தையையும், தாயையும் பார்த்து ஆறுதல் கூறினார். "பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தாயையும், குழந்தையையும் மகளிர் நல வாரியமே பாதுகாக்கும்.
8-ந் திகதி முதல்-மந்திரி உம்மன் சாண்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்தக் குழந்தையை பார்க்க இருக்கிறார். அவருடன் பேசி, தாய்க்கும், குழந்தைக்கும் எந்த வகையில் உதவி செய்யலாம் என்று இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மாபாதகர்களை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

newindianews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக