puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 19 மார்ச், 2013

கணவர்களுக்கு மட்டும் – கட்டாயமானது ( பகுதி – 2 )


கணவர்களுக்கு மட்டும் – கட்டாயமானது ( பகுதி – 2 )


 1. 117295பிள்ளைகளைப் பராமரிக்க அவளுக்கு உதவி செய்.
 2. ஒன்றாக அமர்ந்து சாப்பிட நேரம் ஒதுக்கு.
 3. வீட்டிலிருந்து வெளியேறும் போது கோபத்துடன் வெளியேறாதே.
 4. நீ பயணிப்பதாகவோ பயணம் முடிந்து வீடு திரும்புவதாகவோ அவளிடம் முன்கூட்டியே அறிவித்துக் கொள்.
 5. அவள் உறவு கொள்ளும் மனநிலையிலில்லாத போது அதனை மதிக்கக் கற்றுக்கொள்; எல்லை மீறி வழிதவறிவிடாதே.
 6. வாய்மொழியால் அவளுக்கு பரிசளி; வாழ்த்துவதில் கலைத்துவமாய் இரு.
 7. வீட்டின் இரகசியத்தையும் சுயத்தையும் பேணிக்கொள்.
 8. மார்க்க விடயத்தில் அவளை ஞாபகப்படுத்தவும் உன்னை ஞாபக்கடுத்தச் செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்.
 9. அவள் மீதான உனது கடமையை மதிப்பதோடு அவற்றை நிறைவேற்றவும் தவறிவிடாதே.
 10. நல்ல சந்தர்ப்பத்திலும் கெட்ட சந்தர்ப்பத்திலும் அவளோடு நல்லமுறையிலும் நியாயமாகவும் அன்பாகவும் வாழ்.
 11. அவளது ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் அக்கறை கொள்.
 12. நீ எப்போதும் சரியானவன்; முழுமையானவன் என்று கருதிவிடாதே.
 13. உனது சந்தோசத்தையும் துக்கத்தையும் அவளோடு பகிர்ந்து கொள்.
 14. அவளது பலவீனங்களில் கருணை காட்டு.
 15. உனது மனைவியை முத்தமிடு; அவளுடன் முன் விளையாட்டுக்களில் ஈடுபடு; மிருகத்தைப் போல் அவள் மீது பாயாதே.
 16. உங்களளுக்கிடையிலான முறுகள்களை வெளியே கொண்டு செல்லாதே.
 17. அவள் உன் மீது தங்கியிருக்குமளவு உறுதியான ஆதரவைக் கொடு.
 18. அவள் இருக்கும் விதமாகவே ஏற்றுக் கொள்.
 19. அவளைப் பற்றிய நல்லெண்ணத்துடனே இரு.
 20. முடியுமான போது அவளுக்காக சமைத்துக் கொடு.
 21. இரவில் நீங்கள் முடியுமான போது தொழுது கொள்வதற்காக
உங்கள் வீட்டில் நல்ல; சுத்தமான; தனியானதோர் இடத்தை ஒதுக்கி விடுங்கள்.
 1. பெண்கள் மலர்களை விரும்புவாரகள்; நீ அவளுக்காக வைத்த பரிசுப் பொதிக்குச் செல்லும் பாதையில் சில மலர்களையும் துாவி விடு.
 2. உனது செய்தியை அவள் எதிர்பார்த்திருக்கையில் அவளுக்கு நல்லதாக ஒர் செய்தியை அனுப்பி விடு.
 3. உனது மனைவிக்கு குறுஞ் செய்தி அனுப்வோ மின்னஞசல் அனுப்பவோ காரணம் தேடிக் கொண்டிராதே. அதில் உன் காதலையும் சேர்த்துக் கொள்.
 4. அவளோடு தனியாக வெளியே செல்ல ஒர் நாளை ஒதுக்கிக் கொள்; முடியுமாயின் பிள்ளைகளையும் தவிர்த்துக் கொள்.
 5. உன் மனைவியின் குடும்பத்துக்காக ஏதேனும் செய். அது ஒர் பரிசாக இருக்கமுடியும். அல்லது அவளது சகோதரனுக்கான ஒர் உதவியாக இருக்கலாம். எதுவாயினும் அது உனது புள்ளியை உயர்த்தும்.
 6. உனது உரிமைகள் பற்றி ஞாபகப்படுத்துவதும் கேட்பதுமாக எப்போதும் நச்சரித்துக் கொண்டிராதே.
 7. அவளுக்காக கடைகளுக்குச் செல்; அவளுக்கு தேவையானது, அவள் விரும்பியதை வாங்கிக் கொடு.
 8. அவளது நண்பிகளை சந்திக்க; அவர்களுடன் பொமுதொன்றைக் கழிக்க ஆவண செய்து கொடு.
 9. அவளது பெற்றோருக்கு அவளது உடன் பிறப்புக்களுக்கு வாழ்த்துச் சொல்ல அவளை ஞாபகப்படுத்து.
 10. முடியுமாயின் அவளது குடும்பத்தில் கஷ்டப்பவோருக்கு உதவி செய்.
 11. அவள் வாசிக்கும் புத்தகத்தினுல் காதல் கவிதைகளை,  குறிப்புக்களை எழுதிவை.
 12. அவள் மார்க்க விடயமாக தான் வாசித்த ஒன்றை உன்னிடம் கூறும் போது அவற்றைப் புறந்தள்ளி விடாதே; அவற்றை எடுத்துக் கொள்.
 13. அவளுக்காக முடியுமான, சமயலுக்குத் தேவையான தாவரங்களைக் கொண்ட ஒர் மூலிகைத் தோட்டத்தை அமைத்துக் கொடு.
 14. தேவையான போது அவளது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணணிளை நவீனமயப்படுத்திக் கொடு.
 15. உனது குழந்தைகளுக்கு தங்கள் தாயை மதிக்கக் கற்றுக் கொடு.
 16. அவள் தவறுவிடும் போது அவற்றை நகைச் சுவையோடு அணுகு.
தமிழில் :  பஸ்லான் பாரூக்                                     நன்றி : MUSLIM HUSBAND & WIFE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக