puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 மார்ச், 2013

2013-14ஆம் ஆண்டின் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை:


விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை:


E-mailPrintPDF
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...
2013-14ஆம் ஆண்டின் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கியமைக்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழம் பிரச்சனைத் தொடர்பாக இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சிறுபான்மை தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே அரசு தற்போது தமிழ் பேசும் சிறுபான்மை முஸ்லிம்களை இன்று பல்வேறு வகையில் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகள் மறுக்கப்படுகின்றன மொத்தத்தில் அவர்களின் வாழ்வுரிமை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் பாசிச அரசுக்கு இன்று இந்த அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சாவுமணி அடிக்கும் என்று நம்புகிறேன்.

2013-14 ஆம் ஆண்டிற்கான முன் மதீப்பீடுகளின் அடிப்படையில் நிலையான விலை மதிப்பின்படி, மாநிலத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.61 விழுக்காடு என்ற பின்னணியிலும் மாநிலத்தில் நிலவும் கடுமையான வறட்சியின் பின்னணியிலும் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய வரி பகிர்வில் மாநில அரசின் பங்கு குறைந்துக் கொண்டே வரும் நிலையில் 2007-2008 ல் 17 விழுக்காடாக இருந்த பகிர்வு 2012-2013ல் 14.7 விழுக்காடாகக் குறைந்து தமிழகம் தனது சொந்த நிதி ஆதாரங்களை மேலும் அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு புதிய வரிகள் எதுவும் இல்லாமலும், இருக்கும் வரிகளை உயர்த்தாமலும் இந்த நிதி நிலை அறிக்கையை அளித்தமைக்காக முதலில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன்மைத் துறைக்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட 20.12 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன். 2013-14ஆம் ஆண்டில் மேலும் இரண்டு இலட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் தான் வேளான் விளைபொருட்களைப் பதப்படுத்தும் வசதிகள் செய்ய இயலும் என்று கூறி சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு நியாயப்படுத்தி வரும் நிலையில் இந்த கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு இந்த வரவு-செலவு திட்டத்தில் சேமிப்புக் கிடங்கு வசதிகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளதையும் வேளாண் விளைபொருள் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் இதே போல் நகர்புரப் பகுதிகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலமும் தோட்டக்கலைத் துறை மூலமும் விவசாயிகளையும் நுகர்வோரையும் நேரடியாக இணைக்கக்கூடிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் மனமார வரவேற்கிறேன்.

250கோடி ரூபாய் செலவில் 2013-14ஆம் ஆண்டில் 12ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 இலட்சம் நிலமற்ற ஏழைப் பெண்களுக்கு ஆறு இலட்சம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளும் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.

ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக புதிய ஆழ்கடல் டியூனா மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்காக வழங்கப்படும் மானியத்தை 50 விழுக்காடாக உயர்த்தி இதற்காக ரூ30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.

இராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு மீன் பதப்படுத்தப்படும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.

அரிசி விலையைக் கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக கிலோ அரிசி 20 ரூபாய் விலைக்கு வெளிச்சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் பாராட்டத்தக்க முயற்சி. அகதிகள் முகாமிற்கு வெளியில் வசிக்கக் கூடிய இலங்கை அகதிகளுக்கும் முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன். இதே நேரத்தில் எனது இராமநாதபுரம் தொகுதியில் அமைந்துள்ள மண்டபம் அகதி முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை அளிப்பதற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் பயன்பெறும் வகையில் பல அறிவிப்புகளைச் செய்தார்கள். ஆனால் அந்த அறிவிப்புகளில் சில இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மேலும் பல அறிவிப்புகள் குறித்து நிதி அமைச்சரின் உரையில் குறிப்பிடப்படாவிட்டாலும் இந்த கூட்டத்தொடரில் அந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. தென் மாவட்டங்களில் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடுதல் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என்று இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறேன்.

இராமநாதபுரம்-தூத்துக்குடி சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுவதுடன் அது ஒரு தொழில் வழித்தடமாகவும் மாற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இதற்கு விரைவில் செயல்வடிவம் அளிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்காக மீண்டும் நன்றி சொல்லும் அதே நேரத்தில் இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது. இந்தக் கோரிக்கையை வரும் கல்வி ஆண்டில் நிறைவேற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு ஹஜ் குழு மூலமாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஆண்டு தோறும் மத்திய அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்கள். அதே போன்று இந்த ஆண்டும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு உறுதியுடன் நிறைவேற்றி வருகின்றது. ஆனால் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியான தற்போது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இருக்கும் 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படும் என்ற வாக்குறுதி மட்டும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது. இது குறித்து நான் பல முறை முறையிட்டுள்ளேன். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளதாக மாண்புமிகு சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்களும் பதிலளித்துள்ளார்கள். இருப்பினும் இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் சூழலில் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு "துப்பாக்கி' "விஸ்வரூபம்' திரைப்பட விவகாரங்களில் மாண்புமிகு முதலமைச்சர் உறுதியாக செயல்பட்டது போல் முஸ்லிம்களுக்கான இடஒதுககீட்டு அளவை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

2009ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சில சங்கடங்கள் உள்ளன. அச்சட்டத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக முன்வைத்து வருகிறோம். தேர்தல் பிரச்சாரத்தின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை கவனத்தில் கொண்டு ஆட்சிக்கு வந்தால் திருத்தங்களைச் செய்வோம் என்று உறுதி அளித்தார்கள். சிறுபான்மை மக்களின் மீது பரிவுக் கொண்ட அரசு இத்திருத்தங்களை உடனே நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தினால் (TAMCO) சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு குறைந்த விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகின்றது. நிர்வாக செலவுகளுக்காக தான் வட்டி என்ற பெயரில் இந்த தொகை வசூலிக்கப்படுகின்றது. வட்டி முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் "டாம்கோ' நிறுவனத்தில் பல திட்டங்களைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே டாம்கோ நிறுவனம் வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கும் அந்நிறுவனத்தின் நிர்வாக செலவீனங்களுக்காக பயனாளிகளிடமிருந்து சேவை கட்டணம் வசூலிக்கும் வகையில் உரிய திருத்தங்களை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்விக்கு 2013-14ஆம் ஆண்டில் ரூ.16936.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இந்த அரசு 2011ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு 31,757 ஆசிரியர்களும் 7275 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டுகிறேன். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் சிறுபான்மை உருது மொழியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கவில்லை. சமூக அறிவியல், கணிதம், போன்ற உருது வழிப் பாடங்களை போதிக்கும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எடுத்துக்காட்டாக வேலூர் அரசு முஸ்லிம் மேனிலைப் பள்ளியில் 10 ஆண்டுகளாக 11 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டங்களில் மாற்றம் செய்து அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. புதிய பாடத்திட்ட முறையில் குரூப்-2, மற்றும் கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 தேர்வுக்கான பொதுத்தமிழ் பகுதியில் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. குரூப்-1ல் முதலில் இந்த மாற்றம் குரூப்-2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொது அறிவுப் பாடத்தில் 100 கேள்விகள் பொது தமிழ் பாடத்தில் 150 மதிப்பெண்களுக்னெ கேட்கப்படும் இந்த 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 50 கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

சுனாமி வீடுகள் விபரம்:

APR ப்ராஜக்ட் எனும் ஆந்திரா நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 2900 வீடுகள் கட்ட காண்ட்ராக்ட் எடுத்தனர். இதில் தற்போது,

தரை தளத்துடன் 340 வீடுகள்
வீடுகள் லிண்டல் மட்டத்துடன் 450 வீடுகள்
லிண்டல் போடப்படாமல் சுவற்றுடன் 270 வீடுகள்
ரூப் போடப்பட்டு 270 வீடுகள்
ரூப் மட்டத்துடன் 260 வீடுகள்
மொத்தம் 1590 வீடுகள்

மேற்கண்ட நிலையில் கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 1000 வீடுகள் பூச்சு வேலைகள் செய்யப்படாத நிலையில் உள்ளன. இந்த வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும்.
இராமேஸ்வரத்தில் அரசு கலைக் கல்லுôரி அமைக்கப்பட வேண்டும்.

எனது இராமநாதபுரம் தொகுதியில் இராமேஸ்வரம் ஓலைக்குடா முதல் மண்டபம் ஒன்றியம் புதுமடம் வரையிலான வடக்கு கடல் பகுதியில் தொடர்ச்சியான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நமது நிலப்பகுதியின் பெரும்பகுதி சமீப சில ஆண்டுகளில் கடலுக்குள் சென்றுவிட்டது. இராமேஸ்வரம் ஓலைக்குடா துவக்கப்பள்ளியிலிருந்து சங்குமால் விருந்தினர் இல்லம் வரையும் மண்டபத்தில் பாம்பன் பாலத்தின் துவக்கத்திலிருந்து மீன்வளத்துறை அலுவலகம் வரையும் மரைக்காயர்பட்டிணத்தில் CMFRI ன் பாலத்திலிருந்து வேதாளை செல்லும் கடற்கரைச் சாலையில் மகளிர் மன்ற கட்டடம் வரையும் சுந்தரமுடையான்-சீனியப்பா தர்கா பகுதியிலும் இந்தக் கடல் அரிப்பின் பாதிப்பைப் காண முடியும். சுனாமிக்குப்பிறகு குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் பத்து அடி முதல் நூறு அடி தூரம் வரை நிலப்பகுதி கடலுக்குள் சென்று விட்டதாக இப்பகுதி மக்கள் கவலைப்படுகின்றனர். மேலும் பரவலாக வருடத்திற்கு மூன்று அடி வீதம் இவ்வாறு கடல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதி கடலுக்குள் செல்கிறது. சீனியப்பா தர்கா பகுதியில் கிராம சாலையே கடலுக்குள் சென்றுவிட்டதால் ஊராட்சி மன்றம் புதிய சாலை அமைத்துள்ளது. காலப்போக்கில் இப்பகுதியின் பல கிராமங்கள் இருந்ததற்கான சுவடே இல்லாமல் அழிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதற்கு தீர்வாக கடற்கரை ஓரங்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர். கடல் அரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஓலைக்குடாவில் சுமார் 500மீ தூரம், மண்டபத்தில் சுமார் 500மீ தூரம், மரைக்காயர்பட்டிணத்தில் சுமார் 350மீ தூரம், சீனியப்பா தர்கா பகுதியில் சுமார் 350மீ தூரம் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருப்புல்லாணி ஒன்றியம் உத்திரகோசமங்கை ஊராட்சியில் உள்ள கோவில்சுற்றுப்புற பகுதியில் மழை பெய்தால் குளம் போல் தண்ணீர் தேங்குவதாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவே மேற்கண்ட உத்திரகோசமங்கை கோவிலைச்சுற்றிய பகுதியில் மழை நீர் தேங்காதவாறு தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் தொகுதி பாம்பனில் வடக்கு கடற்கரை பகுதியில் பாம்பன் பாலத்தின் அடியில் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வல்லங்களை நிறுத்துவது, மீன்களை ஏலமிடுவது, உலரவைப்பது, வெளியூர்களுக்கு அனுப்பும் மீன்களை பதப்படுத்தி வைப்பதற்கு கொட்டகை ஆகியன பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் வடக்கு போட்யார்ட் எனப்படும் வடகடல் பகுதி தொழில் மூலம் நடைபெற்று வருகிறது. மேற்படி வடக்கு கடல் பகுதியில் உள்ள மேற்கூறப்பட்ட கடல் தொழில் நிறுவனங்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிகிறேன். இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். எனவே மேற்படி பாம்பன் வடக்கு கடற்கரை மீனவ தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மீனவ தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்திட வழி ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் தொகுதி பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் பருவகாலங்களில் மழை மற்றும் காற்று அதிகரிக்கும் போது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மீன்பிடி படகுகள் பெருமளவு சேதமடைகிறது. மீன்பிடி சாதனங்கள் அழிந்து போகின்றன. மேலும் வசிக்கும் இடத்தை விட்டு இடம்பெயரும் நிலையும் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாம்பன் வடக்கு கடல் பகுதியில் லைட்ஹவுஸ் முதல் போட்யார்ட் வரை தூண்டில் வளைவு ஏற்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதி என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் மழைக்காலங்களிலும் மற்ற காலங்களிலும் அதிகப்படியான தண்ணீர் உத்திரகோசமங்கை ஆறு மற்றும் வைகை ஆறு மூலமாக கடலில் கலக்கிறது. சக்கரக்கோட்டை கண்மாய் தென்பகுதியிலும், பெரியகண்மாய் கிழக்கு பகுதியிலும் நீர் சேமிப்பு வசதிகள் இல்லாததால் வீணாக கடலில் கலக்கும் நீரை தேக்க முடியவில்லை. இதனால் கடலுக்கு அருகில் உள்ள வெளிப்புற நீர் (BACK WATER) உப்பாக மாறுகிறது. இந்நிலையில் திருப்புல்லாணி ஒன்றிய சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் மிகுந்த சுவையான நீர் வளம் உள்ளது. இந்த கிணற்று நீர் மூலமாக தென்னை, மா, முந்திரி போன்ற பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியமான உண்மை. மேலும் இப்பகுதியில் உள்ள கிணறுகளிலிருந்து தான் கீழக்கரை நகராட்சி மற்றும் பிற பகுதி கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே திருப்புல்லாணி ஒன்றியம் திருப்புல்லாணி வருவாய் கிராமங்களில் கோரைக்குளம், மேலப்புதுக்குடி கிராமங்களுக்கு குறுக்கே உத்திரகோசமங்கை ஆற்றில் ஒரு தடுப்பணை அமைத்து உபரியான மழை நீர் மற்றும் வெள்ள நீரை தேக்கி வைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் நீரின் சுவை மேம்படுத்தவும் ஒரு திட்டம் தயாரித்து செயல்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக