ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 19 ஆயிரத்து 883 மாணவ –மாணவிகள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதுகின் றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் இன்று (27–ந்தேதி) தொடங்கி ஏப்ரல் 12–ந்தேதி வரை நடை பெறுகிறது. இதன்படி ராமநா தபுரம் கல்வி மாவட் டத்தில் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 575 மாணவர்களும், 5 ஆயி ரத்து 673 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 248 பேரும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 363 மாணவர்கள், 4 ஆயிரத்து 272 மாணவிகள் என மொத் தம் 8 ஆயிரத்து 635 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுது கின்றனர். மாவட்டம் முழுவ தும் இந்த ஆண்டு மொத்தம் 9 ஆயிரத்து 938 மாணவர்கள், 9 ஆயிரத்து 945 மாணவிகள் என 19 ஆயிரத்து 883 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களும் என மொத்தம் 60 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. தேர்வுகளை கண் காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகாம சுந் தரி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஈவ்லின் சுகுணா, குணசேகரன் மற்றும் கல்வித்துறை அலுவலர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி
இந்த நிலையில் பிளஸ்–2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. அதனை தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணியை கல்வித் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட் டங்களில் விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் அமைக் கப் பட்டுள்ளன. ராமநாதபுரத் தில் செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியிலும், பரமக் குடியில் கீழ முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியிலும் விடைத் தாள்கள் திருத்தப்பட உள்ளன. இதில் ராமநாதபுரத்தில் 34 முதன்மை தேர்வாளர்கள், 34 கூர்ந்தாய்வு தேர்வாளர்கள் மற்றும் 204 உதவி தேர்வாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
dailythanthi. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக