puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 23 பிப்ரவரி, 2013

பான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்



நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.

1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
 
3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பி க்க முடியும்.
 
4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோ க்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செல வாகு ம்.
 
5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் Fixed Deposit செய்யும்போது அவசிய ம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசிய ம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணை யங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி க்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிக மாக செலுத்தும் போது அவசி யம்.
10) வருமான வரி ரிட்டன தாக் கல் செய்ய அவசியம்.
11)சேவை வரி மற்றும் வணிக வரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடுசெய்யும் போதுதான் பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால், தற்போ து எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண் டும்.
மேலும், மைனர்பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டு ம். இதற்காக, தற்போது மைனர்களு க்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
 
இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினை க்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிக மான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வரு கின்றனர்.
“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக் கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண் ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக் கியுள்ளது.
 
மேலும், இந்தக் கார்டை வாங்கி னால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரிசெலுத்த வேண்டி யிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந் துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற் காகவே இந்த பான்கார்டு கட்டா யமாக்கப்பட்டுள்ளது.
 
பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளி தாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர்:
வருமான வரித்துறையின் Form 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான் றிதழை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை
(or)
(or)
ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்தி லும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். 
 
இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி
1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ்
2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ்
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில்
5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு
6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது
7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட்
8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை
9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம்
10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
 
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தா ல், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போ துமா னவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணை யத்தளத்தை நாடலாம்.
 
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவர ங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும். அதைத் தெரிந்து கொள் வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக்  கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J  - Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்துவரும் எண்கள் வரிசை எண்களாகு ம். இது 0001ல் ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசி எழுத்து ம் வரிசை எண் தொடர்புடையதுதான்
 
மத்திய வருமான வரித்துறை அலுவ லகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்க ப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமி னேட் கார்டை பெறவேண்டும் என விரும் பினால் மட்டும் புதிதாக விண்ண ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றா லோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
 
இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்

vidhai2virutcham. thanks
 - P.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக