| ||
இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் 2009 பிப்ரவரி 19-ந் தேதி தொடர் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமான வக்கீல்கள்
படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் நடந்த 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று
அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி ஐகோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் மோகன
கிருஷ்ணன்இ முன்னாள் ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ்இ தமிழ்நாடு
வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன்இ முத்து ராமலிங்கம் தலைமையில் ஏராளமான வக்கீல்கள்
இன்று ஐகோர்ட்டில் ஊர்வலமாக சென்றனர்.பின்னர் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் வாயில்
கறுப்பு துணி கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம்
பாதிக்கப்பட்டது. வக்கீல்கள் சங்க தலைவர் கள் பேசும் போதுஇ தடியடி சம்பவத்தில்
ஈடுபட்ட அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன்இ கூடுதல் கமிஷனர் விசுவ நாதன்இ இணை
கமிஷனர் ராமசுப்பிரமணிஇ துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் மீது தமிழக அரசு
உடனே கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
.tamilantelevision thanks
|
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
கோர்ட்டில் நடந்த தடியடிக்கு கண்டனம் : ஐகோர்ட்டு வக்கீல்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மறியல்-ஆர்ப்பாட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக