puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பாகிஸ்தான் வீரச்சிறுமி மலாலா நோபல் பரிசுக்கு பரிந்துரை

[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013, 01:44.22 பி.ப GMT ]
பாகிஸ்தான் வீரச்சிறுமி மலாலா யூசுப்சாய், 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவியான மலாலா, தனது சமூக வலைத்தளத்தில் தலிபான்களுக்கு எதிராக பெண்கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு ஒக்ரோபர் 9ம் திகதி பள்ளிப் பேருந்தில் தலிபான்களால் சுடப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த மலாலா, இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

இதற்கிடையில் நோர்வேயில் ஒவ்வொரு வருடமும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
முந்தய ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள், சில பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், பல நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில குறிப்பிட்ட உலகளவிலான அமைப்புகள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோபல் பரிசுக்கான பரிந்துரையைச் செய்யலாம்.
இவ்வாறு பரிந்துரை செய்தவர்கள், தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களைப் பற்றிய விபரங்களை வெளியிடலாம்.
அந்த வகையில் பிரெஞ்சு, கனடா, மற்றும் நோர்வே நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலாலாவை பரிந்துரைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் பெலாரசின் அலெஸ் பெல்யாட்ஸ்கி மற்றும் ரஷ்யாவின் லூத்மிலா அலெக்ஸேவா போன்ற மனித உரிமை போராளிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பதை யூகிக்க முடியாது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக