ஜக்கார்த்தா, பிப்ரவரி 21- ஜக்கார்த்தா, சுராபாயாவில்,
மூன்றரை வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு சிமெண்ட் பூசி சிலையாக
வடிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஃபாஹ்ரி குசைனி ரொமாடொன் என்ற அந்த பாலகன்
செவ்வாய்க்கிழமை மதியம் தனது அண்டை வீட்டின் பின்பக்கத்தில் சிலையாகக்
கண்டுபிடிக்கப்பட்டான். அச்சிலையை உடைக்காமலேயே பொதுமக்கள் அச்சிறுவனின் உடல்
சிமெண்டுக்குள் புதையுண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
ஃபாஹ்ரி கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன
நிலையில், அவனது சடலம் சிலை வடிவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் 31 வயது ஆடவன் ஒருவனை
விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர். இதற்கு முன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த
சந்தேகத்திற்குரிய ஆடவன் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில்
கைது செய்யப்பட்டான். இதனைத் தொடர்ந்து போலீசார் கொலைச் சம்பவத்திற்கான காரணத்தை
ஆராய்ந்து வருகின்றனர்.
vanakkammalaysia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக