
February
11, 2013 04:50 pm
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
ஊழியர்கள், செக்ஸுக்கு பெயர் போன
ஒரு இணையதளத்தை ஆயிரக்கணக்கான முறை பாராளுமன்றத்தில் இருந்தப்படி பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவுட் ஆப் அஃபேர்ஸ் (Out of affairs) என்னும் இணையதளம், பாலியல் தேவைகளுக்கான ஒரு தேடல் இணையதளமாகும். இந்த இணையதளம் ஏழு
மாதங்களில் 52,375
பார்வையாளர்களை பெற்றுள்ளது.
யார் இந்த
இரசிகர்கள் என்று ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இவர்கள் அனைவரும்
இங்கிலாந்து பாராளுமன்றத்தினர் என்று தெரியவந்துள்ளது.
திருமணமான, திருமணமாகாத ஆண், பெண்
இருபாலாருக்கும் ஆன பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் இணையதளமான ´அவுட் ஆப் அஃபேர்ஸ்´(Out of affairs) பெரும் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
மாத
சந்தா போன்ற சேவைகளில் இணைவோரின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்தே உள்ளது. இந்த நிலையில் இந்த இணையதளம் ஒரு மாதத்தில்
289 தடவை வெஸ்ட்மின்ஸ்டர் அலுவலகத்திலிருக்கும் கம்ப்யூட்டர்கள்
மூலம் இயக்கப்பட்டுள்ளது என்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் 8,457 பார்வையாளர்களையும், நவம்பரில் 7,533 பார்வையாளர்கள் என கடந்த ஏழு மாதங்களில் 52,375 இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த இணையதளம்
உபயோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போல பல்வேறு 500 தகாத
இணையதளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உபயோகித்துள்ளனர். இந்த
தகவல்கள் இங்கிலாந்தின் சுதந்திர தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
பெறப்பட்டுள்ளது
.thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக