First Published : Thursday , 7th February 2013

பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து சித்தூர் எஸ்.பி.யிடம் நேற்று புகார் செய்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் எஸ்.பி. அன்னபூர்ணா நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சித்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், இரவு நேரத்தில் மகளிர் போலீஸ் இல்லாமல் காவல் நிலையத்தில் இளம்பெண்ணை வைத்திருந்ததற்காக எஸ்.ஐ. ரவிநாயக், உதவி எஸ்.ஐ. ராஜேந்திரா, கான்ஸ்டபிள் ரமணா ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. கிராந்தி ராணா டாடா நேற்று உத்தரவிட்டார். பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் போலீஸ்காரர் கோபி அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் சொந்த மாவட்டமான சித்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.tamilkurinji. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக