puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

அதிவேக வாகனத்தைத் துரத்திச் சென்ற இரு காவற்துறையினர் விபத்தில் பலி!



on 22 February 2013.
பரிஸ் உட்சுற்றுப் பாதையில் (périphérique intérieur) நடந்த விபத்தில் இரு காவற்துறையினர் கொல்லப்பட்டதுடன் மூன்றாவது அதிகாரி படுகாயமுற்று ஆழ்மயக்க (Coma) நிலையிலுள்ளார். 40 வயதுடைய Cyrille Genest மற்றும் 32 வயதுடைய Boris Voelkel ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

32 வயதுடைய Fred Kremer கோமா நிலையிலுள்ளார். இவர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறி மிகவும் அதி வேகத்தில் சென்ற ஒரு Range Rover வாகனத்தைத் துரத்திச் சென்றபோதே கொல்லப்பட்டனர். இவ்விபத்து நேற்று காலை 06h00 பரிஸ் உட்சுற்றுப் பாதையில் porte de Clignancourt ற்கும் porte de la Chapelle ற்கும் இடையில் நடந்துள்ளது.


Range Rover அதி உச்ச வேகத்தில் பல வீதிவிதிகளை மீறியபடி சென்று கொண்டிருந்தமையால் porte Maillot விலிருந்து காவற்துறையினர் அவ்வாகனத்தை நிறுத்த முயன்று துரத்திக் கொண்டு சென்றனர். இந்த வாகனத்திற்குள் இருவர் இருந்தனர். அப்பொழுது இரவுச் சுற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றத்தடுப்புக் காவற்துறையின் (BAC) இரவு நேரப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.


இவர்கள் இவர்கள் தமது FORD MONDEO வாகனத்தில் உடனடியாக உட்சுற்றுப்பாதையில் Range Rover ற்கு முன்னதாகச் சென்று அந்த வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் Range Rover சாரதி முன்னாள் வந்த காவற்துறை வாகனத்தை மோதி எறிந்துள்ளார். உடனடியாக வாகனத்தை விட்டு விட்டுத் தப்பியோட முயன்ற இருவரையும் பின்னால் வந்த காவற்துறையினர் கைது செய்தனர்.


இதில் இரு குற்றத்டுப்பப் பிரிவின் காவற்துறையினர் விபத்தில் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர்.Range Rover சாரதி ஏற்கனவே போதைப் பொருட் கடத்தல் மற்றும் கொள்ளை வழக்குகளில் காவற்துறையினரால் அறியப்பட்ட Malamine Traoré என்பவராகும். இவர் முழுமையான குடிபோதையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் வாகனத்திலிருந்த Mehdi Bensassou என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Malamine Traoré ஏற்கனவே ஆறு முறை வீதி விதி மீறலுக்காகக் கைது செய்யப்ட்டுள்ளார். இதில் ஐந்து முறை கைது செய்யப்பட்டபோது இவரிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை. இவரது சாதி அனுமதிப்பத்திரம் இவர் செய்த குற்றங்களுக்காகக் காவற்துறையினரால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுதும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமலேயே தான் வாகனம் செலுத்திக் காவற்துறையினரைக் கொன்றுள்ளார்.


இவர் மீது 'பொதுமக்கள் பணியில் உள்ள அரச அதிகாரியை வேண்டுமென்றே கொலைசெய்தல்' «homicide volontaire sur personne dépositaire de l'autorité publique» என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது. இந்த விபத்து பரிஸ் உட்சுற்று வளையத்தின் போக்குவரத்தைப் பல மணி நேரங்கள் தடைப்படுத்தியது. இவ்வழக்கு விசாரணையை பரிசின் குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.


வேண்டுமென்று செய்யாத விபத்துக் கொலைகளுக்கே பத்து வருடச் சிறைத்தண்டனையும், 1லட்சத்து 50ஆயிரம் யூரோ வரையான குற்றப்பணமும் விதிக்கப்படும். ஆனால் இவர்களது விபத்து வேண்டுமென்றே செய்த கொலையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பொதுமக்கள் பணியிலிருந்த அரச அதிகாரிகளைகக் கொன்றுள்ள வழக்கு. தண்டனை மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.


இந்த விபத்தின் பின்னர் பெரும் அதிர்ச்சியிலுள்ள சக காவற்துறை அதிகாரிகளை உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பலியானவர்களின் குடும்பத்தினரிடமும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
eutamilar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக