puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 28 பிப்ரவரி, 2013

மத்திய பொது பட்ஜெட்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து



  
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலையானது சில வரவேற்புகளையும், சில அதிருப்திகளையும் கொண்டிருக்கிறது.
வேளாண் துறைக்கு 27,049 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், கிராமப்புற வளர்ச்சிக்கு 80,196 கோடியும், சுகாதார மேம்பாட்டுக்கு 37,300 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பதும், தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு 7,500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. நாடெங்கிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மறைமுக வரி மூலம் 4,500 கோடி ரூபாய் மக்கள் தலையில் சுமையாக திணிக்கப் பட்டுள்ளது. விலைவாசியைக் குறைக்க உருப்படியான எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இல்லை. சிறுபான்மை மக்களின் கல்வி மேம்பாடு குறித்து நாடு தழுவிய திட்டங்கள் எதுவும் இல்லை.
உணவுப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த 10,000 கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது போதுமானதல்ல. இந்தத் துறைக்கு இதைவிட ஐந்து மடங்கு நிதி தேவை உள்ளது நிதி அமைச்சர் கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் செல்போன்களுக்கு வரி விதித்திருப்பது தேவையற்றது.

அன்புடன் (எம். தமிமுன் அன்சாரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக