மனித
உரிமை கடுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலியல்
துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது
மூன்றாம் தர துன்புறுத்தல்களை படையினர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி
இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
140
பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை மனித உரிமை கண்காணிப்பகம் தயாரித்துள்ளது. 2006ம்
ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் 75
முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட
யுத்தத்தின் போது அதிகளவான பாலியல் ரீதியான துன்புறுத்தல் சம்பவங்கள்
இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த
குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் விடுதலைப் புலி ஆதரவு பிரச்சாரமாக நோக்கி வருவதாகத்
தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கினால் குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளது.
eutamilar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக