puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 14 பிப்ரவரி, 2013

பிரான்ஸில் வேலையில்லா திண்டாட்டம்: அலுவலகம் முன் ஒருவர் தீக்குளிப்பு

[ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 03:20.16 பி.ப GMT ]
பிரான்சில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வரும் இச்சூழலில் வேலையற்றோர் உதவித் தொகையும் கிடைக்காததால் ஒருவர் ஊடகங்களுக்குத் தன் முடிவைத் தெரிவித்த பின்னர் தீக்குளித்து இறந்துள்ளார்.
மேற்கு ஃபிரான்ஸில் உள்ள நாண்ட்டேஸ்(Nantes) நகரில் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு நேற்று அவர் தீக்குளித்து மரணமடைந்ததால் அந்த அலுவலகம் அன்று முழுவதும் மூடப்பட்டிருந்தது.
கடந்த ஓகஸ்ட் மாதம் பாரிஸ் நகர் அருகே 51 வயதான ஒருவர் வேலை இல்லாததால் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையில்லாதோரின் உரிமைகளுக்காகப் போராடி வரும் CQT Chomeurs என்ற தொழிற்சங்கத்திலிருந்து பிலிப் போட்(Philippe Baot) என்பவர் கூறுகையில், வேலையற்றோர் உதவித்தொகை மனிதாபிமானமற்ற முறையில் தீர்மானிக்கப்படுகிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் வேலையில்லாமல் இருப்பது சமூகத்தை விட்டு எல்லா வகையிலும் விலகி இருப்பதை ஒத்ததாகும் என்றும் அவரது மரணம் ஒரு சமூகரீதியான தற்கொலை எனவும் விளக்கியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் வேலையில்லாதோர் எண்ணிக்கையை கணக்கிட்டபொழுது கடந்த பதினைந்து ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு 3.2 மில்லியன் அதிகமாகியிருந்தது.
இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலாண்ட்(Hollande) கூறுகையில், 2013ம் ஆண்டின் முடிவிற்குள் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும் என்று சூளுறுரைத்துள்ளார். மேலும் அவர் கடந்த 2012ம் ஆண்டை வேலைக்கான போர் நடக்கும் ஆண்டாகக் குறிப்பிட்டியிருந்தார்.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக