- Wednesday, 27 February 2013 01:15
பிரித்தானியாவிலிருந்து மேலும் 65 இலங்கை தமிழர்களை நாடுகடத்துவதற்கு பிரித்தானியா முடிவெடுத்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதுடன் அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்டவர்கள் ஆவார்கள். அண்மையில் இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 15 பேர் இலங்கையில் மீண்டும் சித்திரவதைகளுக்கு உள்ளான சாட்சியங்களை நிரூபித்தமையினால் பிரித்தானியாவில் மீண்டும் அகதி அந்தஸ்து பெற்றிருந்தனர்.
இந்நிலையிலும், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பல்வேறு ஆவணங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையிலும், பிரித்தானிய அரசின் இப்புதிய நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து எதிர்வரும் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளனர் என சேனல் 4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவோர் அங்கு சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார்கள் என தெரிந்தும் இந்த இறுமாப்பான, அலட்சியாமான நடவடிக்கையை பிரித்தானிய அரசு தொடர்ந்து மேற்கொள்வதாக அவர்களின் வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உண்மையில் பாதுகாப்பு தேவையானவர்களுக்கு புகலிடம் வழங்குவதில் இங்கிலாந்து பெருமைக்குரிய நாடாகவே இருந்து வருகிறது. ஆனால் எமது பாதுகாப்பு அவசியமற்றது என நாம் கருதுபவர்களையே திருப்புகிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையிலேயே அவர்களது புகலிட கோரிக்கையின் தகமைகளை ஆராய்கிறோம். மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றமும், அனைத்து தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு அவசியமானது என்றில்லை என கூறியுள்ளது என பிரித்தானிய எல்லை கட்டுப்பாட்டு ஏஜென்ஸி தெரிவிக்கிறது.
இலங்கைக்கு பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் புகலிட கோரிக்கையாளர்கள் அங்கு துன்புறுத்தப்படுகின்றனர் என்பதற்குரிய மிக வலுவான ஆதாரம் இருந்தும் இங்கிலாந்து அரசு இந்நடவடிக்கை எடுத்திருப்பதாக சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புக்கான அமைப்பின் தலைவர் பெஸ்ட் கவலை வெளியிட்டுள்ளார்.
.4tamilmedia.thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக